அண்ணன் நாக்குமார் அவர்களுடன் ஒரு சர்வே களப்பணி!!!

செஞ்சி அருகில் ஒரு கிராமத்தில் களத்தில் நிலம் இருக்கிறது ஆனால் அந்த நிலம் பட்டாவிலும் அ-பதிவேட்டிலும் புலப்படத்திலும் இல்லை!

இதில் உள்ள பிரச்சனையை கண்டுபிடித்து சீர் செய்வது தான் டாஸ்க், கிராம வரைபடம் தற்கால புகைபடம், pre udr புலப்படம் எல்லாம் ஆர்டிஐயில் கேட்டு எடுத்து கொண்டு களத்திற்கு கிளம்பினேன்.

நான் முன்கூட்டியே செஞ்சியல் காத்து இருந்தேன் அண்ணன் சென்னையில் இருந்து பஸ்ஸில் வருவதால் போனை எடுக்கவில்லலை!

நான் அண்ணன் இன்று வரமுடியாது போல் இருக்கிறது என்று நினைத்து ஆரணி தாண்டி நடுகுப்பம் அருகில் சேதாரபட்டு கிராமத்திற்கு ஒரு வேலிதகறாறு வழக்கிற்கு சென்று விட்டேன். நான் சேதாரபட்டு போய் சேரவே மாலை ஆகிவிட்டது. அங்கு திரு பாலகுமார் அவர்களின் சிக்கல்களை எல்லாம் குறிப்பெடுத்துகொண்டு செஞ்சி வந்து அறை எடுத்து தங்கி விட்டேன் நாக்குமார் அண்ணனும் மறுநாள் வந்துவிடுகிறேன் என்றார் .

நானும் காலையிலே நாட்டார்மங்கலம் வந்து அவரை பிக்அப் செய்து கொண்டு இடத்தை பார்வையிட்டேன் ஒரு பத்து நிமிடத்திலேயே பிரச்சினை புரிந்து விட்டது . ஒரு 70 கால் தப்படி நடந்து(Pacer) அளந்து பார்த்ததும் பிரச்சினை கண்டுபிடித்தாயற்று.

நமது இடம் இரண்டு கிராமத்தின் எல்லையில் இருக்கிறது. இடத்தில் நிறைய பாறைகள் இருக்கிறது. ஒழுங்ககற்ள வடிவங்களை மற்றும் அ விலிருந்து ஆ விற்கு இடையில் அளப்பதற்கு நிறைய பாறை தடைகள் இருக்கிறது.

கிராஸ் ஸ்டாப் தவறுகள் என்று இருக்கிறது. களத்தில் இருந்தபடியே கைஸ்கெட்ச்சு் மட்டும் போட்டு கொண்டு கிளம்பினேன் இனி பிளாட் ஸ்கெட்ச் போட்டு ரீ சர்வே க்கிற்கு மனு செய்ய வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில் முனைவர்

9841665836 

#suvey #land #field #problem #rocks #village #plot #sketch #re_survey #paranjothi_pandian #writer #author #trainer #consulting #visible