அம்பத்தூரில் ஒரு கடல்!!!
சென்னை, அம்பத்தூர் டூ புழல் சாலையில் அமைந்துள்ள ஒரகடம் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ரெட்ஹில்ஸ் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த ஒரகடம் கிராமம் இப்பொழுது காஸ்மோபாலிடன் நகரமாக முற்றிலும் உருமாறி இருக்கிறது.
புதூர் -பானு நகரில் ஒரு நில கள ஆய்வுக்காக அங்கு சென்று இருந்தேன் பானு நகரின் கடைசி தெருக்கள் ரெட்ஹில்ஸ் ஏரியை ஒட்டி இருக்கிறது. ஏரியை ஒட்டி பலர் அனுபவம் எடுத்து வீடுகட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நான் இப்பொழுது நிற்கின்ற இடம் மட்டும்தான் ஆக்கிரமிக்கபடாமல் பாதுகாக்கபட்டு இருக்கிறது. பானு நகருக்கு என்று ஒரு குட்டி பீச் போல இருக்கிறது. ஒரு குட்டி அவுட்டிங்கிற்கு ஏற்ற இடம் இன்னும் பூங்கா ஏற்படுத்தலாம் பொதுபணிதுறை.
பானு நகர் பற்றி ரியல்எஸ்டேட் தகவல் என்னவென்றால் உபரிநில உச்சவரம்பு நிலச் சீர்த்திருத்த சட்டத்தில் தப்பித்துக் கொள்ள 1967 இலே பெரிய மனை பிரிவை உருவாக்கி பலதுண்டுகளாக விற்றுவிட்டார்கள். நமக்கெல்லாம் இப்படி ரியல் எஸ்டேட் செய்ய பெரிய நிலச்சுவான்தார் கிடைக்கின்ற பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-நொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#redhills #realestate #beach #banu_nagar #puthur #ambathur #chennai #pulal #orakadam #village #paranjothi_pandian #agent #author #consulting #trainer