அயோத்தியில் பெரிய Flipping Real Estate ஏஜெண்டுகள் இருப்பார்கள்! போல
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை! ஊடகங்களில் வருகின்ற தகவல்களை பொறுத்து கொஞ்சம் காசு பணம் துட்டு மணி மணி என்ற மனபூத்தின் எருச்சியில் எழுதுகிறேன். ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் Buyer க்கு தெரியாமல் buffer வைத்து ஐவேஜி வைத்து வியாபாரம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் பார்ட்னர் ஏஜெண்ட் சொதப்பிடுவான்! டாகுமெண்ட் ரைட்டர் கசிய விட்டுவிடுவார்கள்! Buyer இடம் இருக்கும் பெரும் ரொக்கத்தில் நம்ம கட்டிங் எவேஜி மட்டும் அவருக்கு தெரியாம எடுக்க என்ன பாடு படுவோம். சில நேரம் seller சப்போர்ட் செய்வார் சில நேரம் அவரும் கைக்கு பணம் வந்த பிறகு மாத்தி பேசுவார். பத்து காசு வீட்டுக்கு எடுத்துகொண்டு போக பெரும் ரோதனையாக சவாலாக இருக்கும். இங்கே பாருங்க அயோத்தியில் கோயிலுக்கு வாங்க வேண்டிய இடம் 5.8 கோடி மதிப்புள்ள 12,080 சதுரமீட்டர் விஸ்தீரணமுள்ள நிலம் மார்ச் 18 அன்று இரவு 7.10 மணிக்கு 2 கோடிக்கு வாங்கி பதியபட்டது. அதே நிலம் இரவு 7.15 மணிக்கு ராம் மந்திர் அறக்கட்டளைக்கு 18.5 கோடிக்கு விற்கப்பட்டு பதியபடுகிறது. அட அட எவ்வளோ ஐவேஜின்னே தெரியல! பிஸினஸ்ன்னா இப்படி செய்யனும்! பதிவு அலுவலகம் வியாபாரிகள் கட்டுபாட்டில் நிலம் வாங்கிரவங்க விற்பவர்கள் என இருவரும் வியாபாரிகள் கட்டுபாட்டில் மாஸ்ஸா பிஸினஸ் நடத்தி இருக்காங்கப்பா! கடந்த 10 ஆண்டுகளில் அதிக மார்ஜின் ஐவேஜி இருக்கிற இடை தரகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் இந்த அயோத்தி இராமர் கோயில் பிஸினஸ் டீலாக தான் இருக்கும்.
5 நிமிட இடைவெளியில் 16.5 கோடி லாபம். இரண்டு ஆவணங்களிலும் ஒரே சாட்சிகள் வேறு. அதாவது யாரையும் உள்ளே விடலை போல்.இராம பாணம்தான் கேள்விபட்டு இருக்கறேன் இது இராம பணம்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Ayodhya #Land #ramarkoil #real_estate #business #plots #realestate #realestateconsultant #realestateservices #realestatebooks #realestatecoach #Entrepreneur #author #property #propertylaw #cmda_plots #residential_plots #patta #chitta #plotsale #deed #Documentation #EC #survey #asset #patta_change #consultancy #training