தஞ்சையில் புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் நன்றாக கணக்கு சொல்லும் வாத்தியாரை தஞ்சாவூர் ராதா மேம் மூலமாக சந்தித்தேன். நிலசிக்கல்களுக்கு தான் கூட்டம் வரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் சாதாரண பொதுஜனம் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கை பற்றி கணக்கு கேட்க நின்று கொண்டு இருந்தார்கள். அவரும் பலரின் மன அழுத்தங்களை தனது பேச்சால் heal செய்து கொண்டு இருந்தார். அறை முழுதும் அம்மன் படத்தை பெரிய அளவில் வைத்து ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார் அவர் என்னைபார்த்த அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்.எப்படி சொன்னார் என்று இன்னும் புரியவில்லை.
அதே போல் அவரின் நில சிக்கலை சரி செய்யும் வேலையும் என்னிடம் ஒப்படைத்தார் அந்த பணியை நான் எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் விட்டு கிளம்பினேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டின்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Tanjavur #Tanjai #Punnainallur #temple #Mariammantemple #Mariamman #fieldwork