ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!!
2J யில் நாம் தேடி போகும் ஆவணங்கள் ஒன்றாக இருக்கும் ஆனால் கண்ணுக்கு படும் ஆவணம் வேறொன்றாக இருக்கும். நான் எஸ்டேட் ஒழிப்பு ஆவணங்களை ஆராய்ச்சி செய்தேன். ஆனால் Law and Order சீக்கினாங்குப்பம் கலவரம் என்ற தலைப்பில் பழைய ஆவணத்தை பார்த்தேன். நிதானாமாக எடுத்து பக்கத்திற்கு பக்கம் வாசித்தேன் பழைய Black and White சினிமா பார்த்தது போல விறுவிறுப்பாக இருந்தது. இசிஆரில் நெய்தல் சொர்க்கம் இடைகழிநாட்டில் இருக்கிறது. இந்த சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி என்ற கம்பெனி சொகுசு மனைகளை விற்பனை செய்தது. நானும் கடைமடை புரோக்கராக அந்த புராஜக்டிற்கு ஸ்கூட்டரில் சுற்றி இருக்கிறேன். அந்த கிராமத்தில் 1970 களில் பெரிய கலவரம் 7 பறையர்களை காணவே இல்லை! கம்பத்தார்கள் (ரெட்டியார்கள்) மீது குற்றசாட்டு!மிராசு எதிர்ப்பு போராட்டம். அய்யா இளைய பெருமாள் மதுராந்தகம் உக்கம் சந்த் என்று பலர் அமைதி பேச்சு என்று போய் கொண்டே இருந்தது. முழுமையாய் படித்து முடித்தேன். இப்பொழுது இருக்கும் ஸ்வர்ணபூமி சைக்கோபூமியாக இருந்து இருக்கிறது.
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#RTI #2j #maduranthakam #read #history #riots #document #search #liquidation #titled #Law #Sikhinangkuppam #black_and_white #movie #ECR #Suvarnabhumi #company #sold #luxury #plots #Kambattars #Rettiyars #Mirasu #Ukkam_Chand #psychobhoomi