ஆளவந்தார் நில மறு அளக்கை !
ஆயிரங்காணி ஆளவந்தார் நிலங்களை அளக்கை செய்கிறார்கள் !என்ற செய்து கொரானா லாக்-டவுன் பொழுது வந்தது.
நான
சென்ற வருடம் யூடியுபில் இந்த நிலங்கள் பற்றி பேசி இருந்தேன்
அதில் இந்த நிலங்களை துல்லியமாக அளந்து இருக்க வாய்ப்பில்லை சிறு சுற்றுபுலம் அளக்கை (small circuit filed survey) தான் செய்து இருப்பார்கள்.இதையே இரண்டு மூன்று துண்டாமாக பிரித்து அளந்தார்களா என்று தெரியவில்லை என்று சொல்லி்இருந்தேன்.இப்பொழுது மறு நில அளக்கை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கின்ற சர்வே கற்று கொள்ள விரும்புகிறவர்கள்
போய் பார்க்கலாம் பெரும்பாலும் காலை 8மணி யில் இருந்து 12 மணிக்குள் களபணியை முடித்து விடுவார்கள், மாலை பேப்பர் வேலைகள் செய்வார்கள்.
நிறைய பேருக்கு ஆளவந்தார் என்றால் ஆளவந்தார் கொலை வழக்கு என்று என்னிடம் சொல்கிறார்கள். அந்த ஆளவந்தார் வேறு இந்த ஆளவந்தார் வேறுப்பா! அந்த ஆளவந்தார் சென்னை பாரிஸில் பேனா வியாபாரி, பல பேர வழி, ஒரு சேச்சிய பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சேச்சியும் அவர் கணவர் சேட்டனும் கொன்று தலை சென்னையிலும் முண்டம் மானாமதுரை இரயில்வே ஸ்டேசனலும் போட்டு விட்டு போனதால் பெரிய அளவு அந்த கால செய்தி! இன்றும் சமூக ஊடகங்களில் சுற்றி கொண்டு் இருக்கிறது
இந்த ஆயிரங்காணி ஆளவந்தார் ரொம்ப பழைய ஆளு !தொழில் முனைவர்,சம்பாதித்தை எல்லாம் நிலத்தில் முதலீடு செய்தவர்.இந்த நிலத்திலேயே புதைக்கபட்டு் இருக்கிறார்
இந்த ஆயிரங்காணி சர்வே முடிவுகளை எதிர்பார்க்கிறேன் .இப்போதைய நவீன தொழில் நுட்பத்துடன் செய்யும் அளக்கைக்கும் அப்போதைய பழைய அளக்கைக்கும் எத்தனை சதவீதம் வித்தியாசம் வருகிறது என்று !மிக குறைவாகவே வித்தியாசம் வந்தால் அந்த கால சர்வேயர் கில்லாடிகள் என்று அர்த்தம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834