இந்து அறநிலைய சட்டம் பிரிவு 34(A) கீழ் 1000 மடங்கு வாடகை உயர்த்தி இருக்கிறார்கள். எந்தவித Structure உம் கட்டி கொடுக்காமல் அடிமனைக்கே இந்த வாடகையை உயர்த்துகிறார்கள் என்றால் அறநிலையதுறையினருக்கு அதிக இலாபவெறிதான் கண்முன் நிற்கிறது. இந்து அற(மற்ற)நிலைய துறை அடிதட்டு நடுத்தர மக்களின் வேதனையை சம்பாதித்து கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பும் மக்களை சட்டபடி செய்கிறோம் என்று பதில் சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அந்த சட்டத்தை கொஞ்சம் மக்களுக்கு ஏன்றது போல் திருத்த வேண்டி இருக்கிறது. அதற்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழ்நாடு கோவில்மனையில் குடியிருப்போர் சங்கம் ஒருங்கிணைக்கிறது. அதற்கு பலம் சேர்க்க. அணிதிரண்டு செல்லுங்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665839

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #hinducharitydepartment #demonstration #attention #தமிழ்நாடு #கோவில்மனை #சங்கம்