இந்து அறநிலைய துறையும் அதன் அக்கபோரும்!
 
நிலம் உங்கள் எதிர்காலம் என்று பல ஆண்டுகளாக நான் கூப்பாடு போட்டு வருகிறேன். சமய நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற காலம் காலமாக கல்யாணம் ஆகாத சந்நியாசியை நியமித்து மடம் உருவாக்கி நிலங்களை பாதுகாத்து வருகிறது. நீதி கட்சிக்கு ஆட்சி பிறகு சமய நிறுவனங்களுக்கு அதன் சொத்துகளை நிர்வாகம் செய்ய அற நிலையதுறை உருவாக்கபட்டது. சமீப காலமாக இந்த அற நிலையதுறையினர் பேரில் பல்வேறு குற்ற சாட்டுகள் சொல்லபடுகிறது. கோவில் பூசாரிகள் அறங்காவலரோடு சேர்ந்து இந்து அறநிலையதுறை அதிகாரிகளோடு் சேர்ந்து சிலைகள் பாரம்பரிய தூண்கள் கதவுகள் எல்லாம் களவாடபட்டு வருகிறது என்று ஒரு திருச்சி பக்கம் ஒரு வாத்தியார் சாமி இரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பல வழக்குகள் போட்டு வருகிறார். யானைகளின் வாழ்க்கையிலும் அதன் பாதையிலும் குறுக்கிட்ட ஈஷா நிறுவனத்தின் முதலாளி ஜக்கியும் அற நிலையதுறையை மீட்டு தனி நபர்களிடம் ஓப்படைக்க போராடினார். அவருடன் வலதுசாரி உயர் சாதி இந்துக்களும் கூப்பாடு போட்டார்கள்!
அறநிலையதுறை அதிகாரிகள் பலர் பொன்மாணிக்கவேல் அய்யாவால் ஜெயில் பெயில் என்று போய்விட்டு ஜம்முன்னு சமய நிறுவனங்களின் நிர்வாகத்தில் உட்கார்ந்நு இருக்கிறார்கள்! இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது! இந்து அற நிலையதுறை அமைச்சராக அண்ணன் சேகர் பாப வந்து விட்டார். நானே அவரை அதிகாலையில் சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் பார்த்து இருக்கிறேன். அதிக சமய நம்பிக்கை அதிகம் உடையவர். களபணியாளர் Ground Reality தெரிந்தவர். இப்பொழுது நில ஆவணங்களை ஆன்லைன் செய்வதாக அறிவித்து ஆவணங்களும் ஏற்றபட்டு விட்டன. ஆவணங்கள் முழுமையாக ஏற்றபடவில்லை என்றாலும் படிபடியாக ஏற்றி விடுவார்கள் என்று நம்புகிறேன்.
வருவாய்துறை ஆன்லைன் ஆவணங்கள் பதிவுதுறை ஆன் லைன் இசிக்கள் only reference க்காக மட்டுமே !அதேபோல்தான் இதுவும் reference க்காக! ஆன்லைனில் இருப்பதிலும் தவறுகள் இருக்கும். பிழைகள் இருக்கும். ஆன்லைனில் இருந்தால் தான் கோவில் நிலம் ஆன்லைனில் இல்லை என்றால் கோவில் நிலம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
பல பேருக்கு இது கோவில் நிலம் இனாம் நிலம் என்று சொல்லி அற நிலையதுறை நோட்டீஸ் கொடுத்து வைத்து இருக்கிறது. அவை எல்லாம் இன்னும் ஆன்லைன் ஆக வில்லை அவையெல்லாம் விரைவில் ஆன்லைனுக்கு வந்து விடும். அதன் பிறகு ஆன்லைன் பட்டா சிக்கல் போல் ஆன்லைன் இசி இன்டெக்ஸ் எரர் போல் இதற்கும் ஏதாவது வழி செய்வார்கள் என்று நினைக்கிறேன்!
நமக்கும் சமய நிறுவனத்திற்கும் எந்த வித அக்கும் தொக்கும் சண்டையும் ச்ச்சரவும் கிடையாது! அறநிலையதுறையில் இருக்கும் பெரிய அதிகாரிகள் ஆன திருமகள், ஜெயராமன் மற்றும் இன்னும் பல கோயிலை சிலை திருட்டு வழக்கில் உள்ளவர்கள்! நீதிமன்றம் நியமித்த பொன் மாணிக்க வேல் போன்றோரை வேலை செய்ய விடாமல் செய்த அற நிலையதுறை அரசு எந்திரம்! மைலாப்பூர் பார்வதி மயிலை காண்டிச்ச டிவிஸ் ஓனர் வேணு சீனவாசன், நம்ம ஈஷா கம்பெனி ஓனர் ஜக்கி சாமி இப்பொழுது புதியதாக வந்த அரசியலாளர்கள்! பழைய அரசியல்வாதிகள் நீங்கள் எப்படி வேண்டுமானல் போங்கள்! கோயில் நிலங்கள் சொத்துக்கள் சிலைகள் மணிகள் என எது வேண்டுமானலும் எடுத்து கொண்டு நீயா நானா என்று சண்டையிட்டு கொள்ளுங்கள்!
அடிதட்டு மக்கள் நடுத்தர மக்கள் யுடிஆரில் கோவில் நிலம் இல்லை என்று ஆவணபடுத்திய காரணத்தினால் அதனை நம்பி பணம் கொடுத்து வாங்கிய நிலங்களையும்
உண்மையிலேயே தனியார் நிலங்களை slr இல் இனாம் நிலங்கள் என்று வகைபடுத்தி இருப்பதால் இனாம் எஸ்டேட் ஆக்ட் எதுவென்று தெரியாத மக்களை பயமுறுத்தி கோவில் நிலம் என்று பஞ்சாயத்து செய்வதை நிறுத்தி கொண்டால் போதுமானது
பெரிய பெரிய கார்ப்ரேட், அரசியல், பூஜாரி, அறங்காவலர், நீதிமன்றம், அறநிலையதுறை அதிகாரிகள் பெரிய பெரிய பெரிய யானைகளாக ஒருவரை ஒருவர் முட்டி மோதி பணத்துக்காக நிலத்திற்காக சண்டையிடும் நேரத்தில் அந்த நானையின் காலுக்கு கீழே மிதிபடும் சிவப்பு ரோஜாபூக்களை பத்தரமாக எடுக்கும் சிறுவனை போல இவர்களின் அக்கபோர்களுக்கு இடையில் மிதிபட்டு அப்பாவிகளின் நிலங்களை மீட்க வேலை செய்து கொண்டுவருகிறேன்.
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
போர்களத்தில்
#land #problem #issue #government #realestate #service #writer #consulting #trainer #author #political #punjayath #treasury #department #paranjothi_pandian