நேற்று ரியல் எஸ்டேட் வேலைகளை முடித்து விட்டு வளத்தியில் இருந்து மதுராந்தகம் கிளம்ப இரவு 9ஆகிவிட்டது. சேத்துப்பட்டு அருகில் செல்லும் பொழுது பேய் மழை அதனால் நனைந்த பனியனை பிழிந்து காயபோட்டுவிட்டு ஒரு ஏடிஎம் இல் ஓய்வு கையில் இருந்த மிக்சரும் பிரெட்டும் இரவு உணவாயின. மழை நிற்பது போல் தெரியவில்லை.அந்த நேரம் வாட்ஸ் அப்பில் அண்ணா என் டவுட்க்கு பதில் போடுங்க. Response செய்யுங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட மேசேஜ் இருந்தது. சரி என்று அதெற்கெல்லாம் பதில் போட்டேன்.
11.30க்குதான் மழையும் காற்றும் நின்றது. பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு சேத்துப்பட்டு கடந்து வந்நவாசி சாலை கடந்து இருப்பேன்.வண்டி பின் வீல் பஞசர் ரைட்டு இனி இங்கே ஒரு பஸ் ஸடாப்பில் படுத்துவிட்டு காலையில் வண்டியை சரி செய்து விட்டு கிளம்பலாம் என்று நினைத்து பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன்.அங்கு ஏற்கனவே இரண்டு பேர் படுதது கொண்டு இருந்தனர். அண்ணா வண்டி பஞ்சர் அதனால் நைட்டு இங்கு படுத்து கொள்கிறேன் என்றேன். உடனே அவர் நான் பஞ்சர் ஒடடுறவர்தான் என்று சொன்னார்.கொஞ்சம் போதையிலும் இருந்தார்.எனக்கு ஆச்சரியம் நமக்கு தேவையான ஆளையே நாம் சந்தித்து இருக்கிறோம் என்று.பிறகு
சரி அண்ணா! பஞ்சர் ஒட்டி கொடுங்கள் என்றேன். பஞ்சர் ஒட்ட நல்ல வெளிச்சம் வேண்டும் என்பதால் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் சென்றோம். அண்ணனுக்கு போதை இரவில் கண்ணும் கிளியரா தெரியவில்லை.அவரை உற்சாக படுத்தி வேலையை முடிக்க அவரிடம் பேச்சு கொடுத்தேன். நான்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என்றும் இப்போது வீணாய் போய் பஸ் ஸடாபபுக்கு வந்துட்டேன் என்றார்.பேசிகொண்டே பஞ்சர் ஒட.டினார்.ஆனால் பின் வீல் பிரேக் ஒயரை அறுத்து விட்டார். சாரி தலை பிரேக் ஒயர் ஏற்கனவே வீக்கா தான் இருந்தது என்று அந்த ஒயரை கையில் கொடுத்தார்.
இதென்ன சோதனை எல்லாரும் சொத்து சேர்த்து நல்லா இருக்க வேண்டும்.அதற்கு நம்மால் முடிந்த உடல் அறிவு சிந்தனை என்று கொடுத்து கொண்டு இருக்கிறோம். இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து கொண்டு பஞ்சர் அண்ணனிடம் இருந்து விடை பெற்றேன்.
பேக்வீல் பிரேக் இல்லாமல் முன் வீல் பிரேககுடன் பக்குவமாக வண்டி ஓட்டி கொண்டு வந்தேன்.வந்தவாசி தாண்டி மருதாடு வரும் போது எதிரில் மூன்று பைக்கில் இரண்டு இரண்டு போலிஸ் பேடரோல் என்னை நிறுத்தி நைட் இரண்டு மணிக்கு எங்கே சார் போறிங்க என்று கேட்க செஞ்சி டூ மதுராந்தகம் பயணம் பஞ்சர் கதையை சொன்னவுடன் ஒரு காவலர் அண்ணா நீங்க பரஞ்சோதி அண்ணா தானே நான். உங்க கிட்ட மதரையில் இருக்கிற எங்க வீட்டு பிரச்சினைக்கா பேசி இருக்கிறேன்உங்கள் யூடியூப் ஃபேன் என்று சொல்லி எனக்கான நல்லெண்ண தூதராக மற்ற போலிசிடம் என்னை பரிந்துரைத்தார். பிறகு அவர்கள் பிளாஸ்க்கில் வைத்து இருந்த சூடா டீயை பகிர்ந்தனர்.
சிலர் லேண்ட் டவுட் கேட்டார்கள் பதில் சொன்னேன்.அரைமணிநேரம் அவர்களுடன் இருந்தேன்.என் விசிட்டிங் கார்டு கொடுத்து விட்டு நிதானமாக 3.30 மணிக்கு மதுராந்தகம் அலுவலகம் வந்தேன்.
தடை தாண்டி சலிக்காமல் பயணம் செய்வது பழக்கமான ஒன்றுதான். எங்கு தடை வந்தாலும் கூடவே வாய்ப்புகள் கொடுத்து விடுகிற பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி சொல்லி படுத்தேன்.
குறிப்பு: விரைவில் தூர பயணங்களுக்கு காரை வாங்க வேண்டும். நண்பரகள் மறுவிற்பனை காரை சகாய விலையில் பரிந்துரைக்கவும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில் முனைவர்
9962265834
www.paranjothipandian.com
#real_estate #Madhurandakam #Sethupattu #approaches #ghostly #rain_squeezes