உண்மையான ஆம்பள இந்த தோழர்!!
கம்யூனிஸ்டு கட்சி தோழர் காந்தராஜ் என்ற இயக்க பெயரில் 1940 இலிருந்து 1960 வரை தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்காக அதிகார வர்க்கத்திடம் போராடியவர் தோழர்.சீனிவாச ராவ்.
குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தை விட்டு கட்டாய வெளியேற்றத்திற்கு எதிராக அவர் வகுத்த வியூகங்கள் சட்டமாயின! நிலசீர்திருத்த சட்டம் நடைமுறைபடுத்த அவர் முன்னெடுத்த நடைபயணம் என்று சாமானியனுக்கு நில உரிமை இறங்குவதற்கு கடுமையாக உழைத்து இருக்கிறார். அவரின் உழைப்பால் தஞ்சாவூர் கள்ளர் சமுதாய மக்களுக்கு அதிக அளவில் செட்டில்மெண்டிலும், யுடிஆரிலும், RTR இலும் நிலங்கள் இறங்கி இருக்கிறது.
அவரின் புத்தகங்கள், கடிதங்கள் என்னுடைய சிந்தனையில் நிறைய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இன்றைய மில்லினியம் தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது என்னை போன்றோரின் சமூக கடமை!
தென் கன்னடத்தில் பிராமண சமூகத்தில் பிறந்து கீழத்தஞ்சையில் விவசாய பாட்டாளிகளோடு வாழ்ந்து திருத்துறைபூண்டியில் சமாதி ஆகியிருக்கிறார். தஞ்சை மாவட்ட களப்பணியின் போது அவருடைய நினைவிடத்திற்கு சென்றேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Tanjore #Tanjoredistrict #Srinivasarao #Communistparty #farmers #strategies #tenantfarmers #landreform #landreformact #landrights #udr #rtr #settlement #socialduty #socialservice #Brahmin #Brahmincommunity #South #Kannada #southkannada #Keezhaithanjavur #passedaway #thiruthuraipoondi #Memorial