உயில் மோசடியில் பாதிக்கபட்டவருக்காக உயில் கோர்வை செய்யபட்ட புத்தகத்தை நேரடியாக ஆய்வு செய்ய தகவல்பெறும் உரிமைசட்டம் -2005 பிரிவு 2J யின் கீழ் ஆய்வு செய்ய மனுசெய்து இருந்தேன்.
நேரடியாக வர சொல்லி ஜாயிண்ட் 1 சேலத்தில் வர சொல்லி இருந்தனர். கோப்புகளை எடுத்துகொண்டு என் முன் வைத்தனர். ஆரம்பத்தில் மிடுக்காக இருந்த அரசு பொது ஊழியர்கள். நான் ஒவ்வொரு கோப்பின் கோர்வை செய்த பக்கங்களை எண்ணி பார்த்தவுடன் 120 பக்கம் இருக்க வேண்டிய கோப்பில் பல பக்க எண்களை காணவில்லை. என்னை கவனித்த சார்பதிவாளர் மிடுக்கு குறைந்து கன்னத்தில் கைவைத்து விட்டார். இன்னும் பக்க குறிப்புகளை பார்த்து எழுதியவுடன் கோப்புகளை அவரே திரும்ப பெற்றுக்கொண்டு நான் சரியாக அடுக்கி கொண்டு வருகிறேன் என்று என்னை பார்வைவிட மறுத்து விட்டார். நான் தகவல் எப்படி இருக்கிறதோ அப்படியே காட்டவேண்டும் நீங்கள் புதிய தகவலை உருவாக்கி கொடுக்கிறீர்கள் என்று சொன்னேன் அப்படி இருந்தும் கோப்புகளை உள்ளே எடுத்து சென்றுவிட்டார், அடுக்கிவிட்டு வருகிறேன் என்று எங்களை 4மணி நேரமாக உட்கார வைத்து இருக்காறார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#fieldwork #salem #salemcollectoroffice #சேலம் #publicinformationofficer #பொதுதகவல்அலுவலர் #2j #2jpettion #rti #will #fraud #willfraud #document