ஊடேரி பட்டா என்றால் தெரியுமா? அய்யா பெயர் பூமாலை பெரம்பலூர் பிரம்ம தேசம். வழக்கறிஞர் தம்பி ஒருவர் பரிந்துரைத்து என்னிடம் போனில் பேசினார். அவருக்கு நிலசிக்கல் எதிர்மனுதாரர் தவறான ஊடேரி பட்டா வைத்து கொண்டு தொந்தரவு செய்வதாகவும் சொன்னார். எனக்கு அது என்ன ஊடேரி பட்டா வீட்டில் குடியிருந்தால் கொடுப்பது வீடேரி பட்டாவா என்ற எழுவினா ஆழ்மனதில் ஓடியது. நான் பாண்டிச்சேரியில் இருந்து விருதாச்சலம் வருவேன் நீங்க தொழுதூர் வழியா விருத்தாச்சலம் வர சொல்லி பத்திரங்களை எல்லாம் பார்த்தேன். ஊடேரி பட்டா எதுவென்று தேடினேன். கிடைக்கவில்லை கொஞ்ச நேரம் கழித்துதான் UDR பட்டாவை ஊடேரிபட்டா என்று சொல்கிறார் என்று புரிந்தது. மக்கள் மொழியில் யுடிஆர் ஊடேரியாகிவிட்டது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #patta #பட்டா #பெரம்பலூர் #perambalur #chennai #சென்னை #பாண்டிச்சேரி #pondichery #விருத்தாச்சலம் #virudhachalam #udr #UDR #யுடிஆர்