வளர்தொழில் இதழில் வெளிவருகின்ற எனது கட்டுரைகளை பார்த்து விட்டு கோயம்புத்தூர் உடுமலைபேட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூமிதான நிலம் சம்மந்தமான சிக்கல்கள் சம்மந்தமாக என்னிடம் பேசினார்.

அவருடைய தந்தைக்கு யார் பூமிதானம் கொடுத்தார்களோ அவர்களின் வாரிசுகளே மேற்படி நிலங்களை அனுபவிப்பதாகவும் மேலும் பூமிதான ஆவணங்களில் தந்தைக்கு அடுத்து என் பெயர் மாற்றமுடியாமல் தவிக்கிறேன் எனறு சொன்னார்.

நானும் கோவை டூ சென்னை பைக் பயணத்தின்போது உடுமலைபேட்டை சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து நாங்கள் எங்களின் இலவச சம்ருதி சேவை மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கொடுத்தோம் அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி விட்டனர்.

ஆனாலும் தற்போதைய பயனாளியின் பெயரை  உடுமலைபேட்டையில் மாற்ற முடியாத அளவுக்கு முட்டுகட்டைகள் இருந்ததால் சென்னை வர சொல்லி இருந்தேன். அர்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்படி நபர் நேற்று(28.09.2018) அதிகாலை 6 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு வந்து வாசலிலேயே அமர்ந்து இருந்தனர்.

அவர்களோடு தொடர்பில் இருந்த என் சகோதரி மங்கலட்சுமி இதனை என்னிடம் தெரிவிக்க காலை 7 மணி அளவில் அவர்களை சந்தித்து ஹோட்டலில்  அறை எடுத்துகொடுத்தேன்.அவர்கள் நாங்கள் ஓட்டலில் தங்குவதற்கு பணம் எடுத்துவரவில்லை அதனால் ஓட்டல் வேண்டாம் என்று தயங்கினர்.

ஒன்னும் பிரச்சினை இல்லை எங்கள் நிறுவனம் பார்த்து கொள்ளும் 11மணிவரை ஆவது கொஞ்ம் படுங்கள்.12 மணிக்கு பூமிதான அலுவகத்திற்கு செல்வது சரியாக இருக்கும்.ரயிலில் வேற  Unreserved இல் கூட்ட நெருக்கடியில் நின்று கொண்டு வந்து  இருக்கிறீர்கள் உங்கள் கண்கள் எல்லாம் சிவந்து இருக்கின்றது என்று சொன்னபிறகு அரைமனதுடன் சம்மதித்தனர்.

பிறகு எனது குழு உறுப்பினர் கண்ணன் அவர்களை வரவழைத்து இவர்கள் பற்றி விவவரங்கள் சொல்லி பூமிதான அலுவலகம் அழைத்து மனு கொடுக்க சொன்னேன்.கண்ணன் அவர்களும் அவர்களை அழைத்து சென்று கூடடுதல் இயக்குநரை சந்தித்ததும் அவர் உடுமலைபேட்டைக்கு  போனிலே பேசி அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து கொடுத்துவிட்டார்.

மகிழ்ச்சியுடன் மன நிறைவுடன் அவர்கள் உடுமலை பேட்டை சென்றனர்.
ஒருவருக்கு இழந்த ஒரு ஏக்கர் நிலத்தை மீண்டும் பெற்று கொடுக்க பிஸினஸோடு வேலையோடு வேலையாக இதனை செய்த செல்வி.மங்கலட்சுமி,திரு.கண்ணன் நில சீர்திருத்த துறையில் பணியாற்றும் நண்பர் அன்சாரி அவர்களுக்கும் நன்றிகள்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

எழுத்தாளார், தொழில்முனைவர்

9841665836

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

#பூமிதான #நிலம் #கோயம்புத்தூர் #உடுமலைபேட்டை #ஏக்கர் #மனு #Unreserved #தகவல் #பெறும் #உரிமை #சட்டம் #coiambatore #land #dc #acre #petition #information #act #right #valarthozhil #artical