கண்ணகியின் வரலாறு நாம் படிக்கும் போது அக்காலத்தில் இருந்த பௌத்தத்தின் சுவடுகளை நம்மால் உணரமுடிகிறது. பொதுவாக கண்ணகியின் சிலப்பதிகாரம் , சமணம் , பௌத்தம் , வைணவம். கொற்றவைவழிபாடு ஆகியவற்றைக் காட்சியாக ஆங்காங்கே நமக்கு இளங்கோவடிகள் காட்டுகிறார்.
கண்ணகி கோவில்

கோவலனும் கண்ணகியும் பூம்புகாரைவிட்டு வெளியேறும்போது முதலில் வைணவ கோவிலையும், ஒரு அருகதேவ கோவிலையும் வணங்குவதாக சொல்கிறார் .
அடுத்து ஐந்து கிளைகளை உடைய பெரிய அரசமரத்தின் அடியில் இருகின்ற புத்தரை வணங்குவதாக சொல்கிறார்.
தொடர்சியாக ஆறு புத்தர் விகார்களை வணங்கி விட்டு கோவலனும் கண்ணகியும் வெளியேறுவதாக காட்டுகிறார்கள்.
அதேபோல் மாதவி, கோவலன் இறந்த பிறகு பெளத்த மதத்தில் தன்னை ஐக்கிய படுத்திக்கொண்டது மட்டுமல்லாது தனது மகளான மணிமேகலையை பெளத்த மடாலயத்தில் குழந்தையில் இருந்து வளர்த்து பெரிய பெண் பெளத்த துறவியக்கினார்.
மணிமேகலையும் வஞ்சி நாட்டில் உள்ள கண்ணகி கோவிலில் கண்ணகியை சந்தித்து அறிவுரையும் , ஆசியும் பெற்றதாக மணிமேகலை காப்பியம் சொல்கிறது. மேலும் கோவலனின் தந்தையாக மாசத்துவன் உத்தரவுபடி மணிமேகலை காஞ்சிபுரத்தில் உள்ள அறவன் அடிகளிடம் தவப்பயிற்ச்சி மேற்கொள்கிறார்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் திறப்பு விழாவின் போது இலங்கை அரசனான கஜபாகு விருந்தினராக வந்திருந்தது நமக்கு தெரிந்தது. மேற்படி கஜபாகு ஒரு கண்ணகி சிலையும் கண்ணகி வழிபாட்டையும் இலங்கை முழுக்க சிங்களவர்களிடமும் , பௌத்தர்களிடமும் பரப்பி உள்ளார்.
இன்றளவும் இலங்கையில் உள்ள அனைத்து புத்த கோவில்களில் பத்தினித்தெய்யோ என்ற பெயரில் கண்ணகி சிலம்புடன் நிற்கின்றதை நாம் பார்க்க முடியும்.
மேலும் மணிமேகலையின் முற்பிறப்பும் கோவலனின் முற்பிறப்பும் பௌத்தர்களாக காட்டப்படுகிறது. எனவே கண்ணகி தெய்வம் ஒரு பௌத்த பெண் கடவுளாக இருந்து வருகிறார். மேலும் மணிமேகலையின் காப்பியத்தை இயற்றிய மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் அவர்கள் மகாயான பௌத்தத்தை கரைத்து குடித்துருப்பதை காப்பியத்தின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
மேலும் கண்ணகியின் முழு வரலாற்றையும் இலங்கோவடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் முழுமையாக சொன்னது சீத்தலை சாத்தனர் அவர்களே!
மேற்படி சீத்தலை சாத்தனார் அவர்கள் ஆழமான பௌத்த கருத்துகளை உள்வாங்கிய புத்திஷ்டாகவும் மதுரையில் பெரிய வணிகனாகவும் பக்கத்து நாட்டு அரசர்களுடன் கலந்துரையாடுகின்ற அளவிற்கு செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கியிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இதன் மூலம் அவர்கள் காலத்தில் செழித்து இருந்ததை உணரமுடிகிறது.
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#கண்ணகி #சிலப்பதிகாரம் #சமணம் #பௌத்தம் #பூம்புகார் #kannagi #kovalan #poombugar #artical