இந்த இடம் பாண்டிச்சேரி கடலூர் சாலையில் ரெட்டிசாவடியில் ரோட்டில் இருக்கிறது.1990 களில் மக்களின் collective investment மூலமாக கலைமகள் சபா வாங்கி போட்டுள்ள நிலம்.இப்படி தமிழகம் முழுதும் பல நிறுவனங்கள்வாங்கி போட்ட இலட்சகணக்கான ஏக்கர்நிலங்கள் இருக்கின்றன. அனைத்தும் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இருக்கிறது. காவல் நிலையத்தில் ஆக்சிடென்டில் மாட்டிய ஓரங்கட்டிவைக்க பட்ட வண்டி போல பல நிலங்கள் இப்படி கல்லும் முள்ளுமாக இருக்கிறது .சில நிலங்கள் டபுள்டாகுமெண்டுகள் ஆகியும் இருக்கிறது.
என்னுடன் நிற்பவர் கலைமகள் சபா முதலீட்டாளர். இவர் போலிருக்கிற முதலீட்டாளர்கள் எல்லாம் நீதிமன்றதில் இருக்கிற இடத்தை நிலமாக கேட்டால் என்ன? பணம் நீதிமன்றத்தில் இருந்து வரும் வரும் என்று 1989 இல் இருந்துஇன்று வரை காத்து இருக்கிறார்கள். ஒரு நலைமுறை முடிந்து அடுத்த தலைமுறையே வந்துவிட்டது கொஞ்சம் இந்த வேலை எல்லாம் டக்கென்று முடித்துவிடு நீதிதுறையே!! ஒன்று கட்டிய பணத்தை நல்ல வட்டியோடு திருப்பி கொடுக்கலாம் அல்லது நிலத்தை பிரித்து கொடுக்கலாம் இப்பொழுது லே அவுட் போட்டு கொடுத்தாலும் கூடுதல் பணம் கட்டி கூட இடம் வாங்கி கொள்வார்கள். ஏற்கனவே இது போன்ற நில சிக்கல்களை பற்றி என்னுடைய paranjothipandian youtube இல் சிபில் நில சிக்கல்கள் என்ற தலைப்பில் வீடியோபோட்டு
(சிபில் நில சிக்கல்கள் தெரியுமா- -சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
https://www.youtube.com/watch?v=gcuQb6BwA-U&feature=share
அதற்கு நிறைய பேர் ஆதரவு கொடுத்து இருந்தார்கள்.நிறைய பேர் நாங்கள் பாதிக்கபட்டு இருக்கிறோம் என்று எனக்கு மெயில் வாட்ஸ்அப அனுப்பி இருந்தார்கள்.90 களில் manipulation business செய்தவரகள் பாக்கியவான்கள்!
நாங்க inspiration business ஆ scheme இல பிளாட் போட்டுட்டு லேட்டா அரசு எந்திர பாலிசிகளால் பால்டாயில் குடிக்காத நிலையாய் கடும் உழைப்பை போட்டு டெலிவரிதர்றோம் அதுக்கே வாடிக்கையாளர் எங்களை வறுக்கிறார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/சீரியல் தொழில் முனைவர்
9962265834
#Reddisavadi #Cuddalore #Pondicherry #collective #investment #lakhs #acres