காவல் தெய்வமாய் குதிரை மேல் இராவுத்தர்!!!
திண்டுகலில் இருந்து நத்தம் போகும் வழியில் கோபால் பட்டி இருக்கிறது. அதன் அருகில் பாறைபட்டி ஒரு ரியல் எஸ்டேட் கள ஆய்வுக்காக நான் சென்ற பொழுது சாலையோரம் ஒரு சிறு அய்யானார் கோவில் அவருக்கு காவலாக குதிரையில் ஒரு இராவுத்தர்
இஸ்லாமியர்கள் நம்முடைய நாட்டார் வழக்கு தெய்வங்களுடன் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் மக்களுடன் நிற்கிறார்கள் என்று இந்த சிலையை பார்த்தவுடன் தோன்றியது.
பைக்கில் இருந்து இறங்கி பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தால் யாருக்கும் ஒரு முழுமையான தகவல்களை சொல்லவில்லை!
பெரும்பாலும் குதிரை விற்பவர்கள் தான் இராவுத்தர்கள், குதிரையை கொண்டு வந்து விற்று இருக்கலாம். குதிரைக்கு கீழே நிற்க வேண்டியவரை குதிரை மேலே ஏற்றி இருக்கலாம்.
எப்படியோ சமூக ஒற்றுமைக்கு அடையாளமாக இருந்தால் சரி!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
#field #paranjothi_pandian #author #writer #consulting #trainer #people #ayyanar #ravuththar #paaripatty #naththam