கேளம்பாக்கத்தில் மாலை ஆறு மணி இருட்டில் மனைத் தேடிக் கண்டுப் பிடிப்பு!!
மைலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட சாமுதாயத்தினர் கேளம்பாக்கதில் சில ஏக்கர் நிலங்கள் வாங்கி ஆளுக்கு ஒரு சென்ட் என்று மனையைப் பிரித்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
low income group மக்களுக்கு பயனுள்ள வீட்டு மனை. ஆனால் டிடிசிபி வரன்முறைப் படுத்தி அப்ரூடு வாங்கி பதிய வேலை செய்ய வேண்டும். சரி மனையைக் கண்டுப்பிடிக்கலாம் எங்கு இருக்கின்றது என்று கிளம்பினால் மதியம் மூன்று மணி வானம் இருட்டிவிட்டது.
அப்படி இப்படி நாலு பேரைக் கேட்டு ஆளுக்கு ஒன்னு ஒன்னு சொல்ல கடைசியில் பெரிய பில்லேரிக் கிராமத்தில் இடத்தைக் கண்டுபிடித்தேன். கேளம்பாக்கம் பக்கம் வெள்ளைச் சட்டை போட்ட நம்ம ஆளுங்களே கடையிலையும் பஜார்லையும் பார்க்க முடியலை சரி தெருவில் இருப்பார்கள் என்றால் ஆளுங்களே காணோம்.
மழையானலும் வெயிலானாலும் தொழில் செய்யும் எங்கள் கூட்டத்திற்கு என்னாயிற்று!
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.com
9841665836
#Kelambakkam #Mylapore #few_acres #land #DTCP #Billeric #village #shop #bazaar #street