கோமுகி நதிதேவதையின் ஆசிர்வாத பூமி சின்ன கல்ராயன் சமவெளி!!!
கள்ளகுறிச்சியின் நிலத்தின் நலமறிய ஆவல் கருத்தரங்கம் மற்றும் களபணிக்காக சென்ற பொழுது கள்ளகுறிச்சியில் இருந்து 20 கி மீட்டர் தொலைவில் இருக்கும் பொட்டியம் என்ற சின்ன கல்ராயன் மலை அடிவார பகுதியில் எட்டு ஏக்கர் சர்வே சிக்கல் சம்மந்தமாக வழிகாட்ட ஆய்வு செய்ய சென்று இருந்தேன். காலை பத்து மணிக்கு கருத்தரங்கம் ஆரம்பம் அதனால் காலை 5.30 மணிக்கு கிளம்பிவிட்டேன். புல்லட்டில் கள்ள குறிச்சி நகரம் கடந்து சில ஊர்கள் கடந்து சில காப்பு காடுகள் கடந்து நுழைந்தால் கோமுகி ஆறும் அணையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பச்சையாய் செழிப்பாய் வனப்பாய் இயற்கை தேவதை சிரித்து கொண்டு நிற்கிறாள். உண்மையில் அன்று இரவு முழுதும் தூங்காத்தால் ஒரு வகை அசதி இருந்தது, ஆனால் அங்கு போய் கண்ணகல மலையும் மலை சாரந்த அழகை பார்த்துவிட்டு அங்கு சின்ன பழங்குடி கிராமத்தில் வயற்
காட்டு வேலைக்கு போகின்றவர்களுக்காக ஒரு டீகடையும் டிபன் கடையும், அதில் பாலில்லாத ஒரு டீ அமர்ந்து குடித்தவுடன் என் நாட்டின் அழகையும் என் நாட்டின் மக்களையும் இண்டு இடுக்கைல்லாம் சென்று இரசிக்க வாய்ப்பு கொடுத்த என் தொழிலுக்கு பெருநன்றி தெரிவித்தேன்.
இந்த பகுதிகள் நிலங்கள் தான் கடைசி நிலம் மக்களுக்கு இறங்கிய யுடிஆரில் தான் மக்களுக்கு செட்டில் மெண்ட் ஆனது.தமிழகத்தின் பிற பகுதிகள் எல்லா நான்கு மூன்று இரண்டு முறை என நிலம் மக்களுக்கு இறங்கியிருக்கிறது. இந்த பகுகுதிகள் முழுக்க நவாப் ஆட்சியில் நியமிக்கபட்ட ஜாகிர்கள் கட்டுபாட்டில் இருந்தது. எஸ்டேட் ஒழிப்பு சட்டம் போட்டும் நிலம் ஜாகிர் கட்டுபாட்டில் தான் இருந்தது. காவல் துறை ஜாகிர்களை கைது செய்து விட்டு தான் யுடிஆர் செய்ததாக சொல்வார்கள். மக்களுக்கு நிலம் இறங்க இறங்க நிலத்தை நகரமாக்கிவிட்டர்கள். கள்ளகுறிச்சியில் நிலமே தாமதமாக இறங்கியதால் இப்பொழுதுதான் நகர்மயம் தெரிகிறது
நவாப் நியமித்த ஜாகிர்களுக்கு குதிரை படை வைத்துதான் அப்பொழுது அந்தஸது அதற்கேற்ற வாறு கிராமங்கள் மேல்வார உரிமையில் ஒதுக்கபட்டு இருந்தனர்.50 குதுரைபடை 500 குதிரை படை 5000 குதிரை படை என்று ஜாகிர்கள் இருந்தார்கள்.ஆரணி 5000 குதிரைபடை ஜாகிர் இந்த சின்ன கலராயன் மலையுன் 50 முதல் 500 வரை குதிரைபடை வைத்து இருந்த ஜாகிர்கள்.அதற்கேற்றவாறு கிராமங்கள் மேல்வார பாத்யத்தில் கொடுக்கப்பட்டது. அதன் படி மலை வளங்களையும் விளைச்சலையும் ஜாகிர்கள் அனுபவித்தனர்.குதிரையில் மலை முழுதும் சுற்றி சுற்றி வந்து இருப்பார்கள். இப்பொழுது 10 ஏக்கர் 15 ஏக்கரோடு அவர்கள் வாரிசுகள் விவசாயிகளாக இருக்கிறார்கள்.
ஜாகீர் என்றால் துருக்கி மொழியில் எஸ்டேட் உரிமையாளர் ஜாகா-ஜாகை எல்லாம் நிலத்தைதான் குறிக்கிறது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834