கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட்
நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!!
2016 பத்திரபதிவு தடைக்கு பிறகு மாத தவணையில் மனைகள் விற்கும் நிறுவனங்கள் பெருத்த பாதிப்புகளை அடைந்தன.விற்பனைகள் குறைந்தது வாங்கிய வட்டிகடன் ஏறியது.கூட இருக்கும் நண்பர்கள் தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை மறந்து செல்லும் நாரைகள் ஆகிவிட்டனர்
அரசியல்வாதிகள் பஞ்சாயத்துகள்,காவல் நிலைய பஞ்சாயத்துகள் வழக்கறிஞர் பஞ்சாயத்துகள்!என்று முகவர்களும் வாடிக்கையாளர்களும் ஒட்டு மொத்த நிறுவனத்திற்கும் அழுத்தங்களை கொடுத்தார்கள்.
ஏற்கனவே பொறாமையில் இருப்பவர்கள் ஆகா மாட்டிட்டான் பரஞ்சோதி என்று அகமகிழந்தனர்.தொடரந்து உழைக்க இயலாத முகவர்கள் தங்களால் தான் நிறுவனம் வளர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டு கொண்டனர்.
அத்தனை தடைகளை தாண்டி எந்த வித எதிர்மறை எண்ணங்களையும் மனதிற்குள் புக விடாமல் நல்லெண்ணம் நல்நம்பிக்கை உணர்ச்சிகளை மட்டும் பிரபஞ்ச வெளியில் படரவிட்டு புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வியாபரத்நை மீண்டும் நிலை நிறுத்த வேண்டியதுதான் ஒரு தொழில் முனைவரின் கடமை.அதனை நான் மிக சிறப்பாகவே செய்து இருக்கிறேன்.
என்னுடைய வியாபரா சரிவுக்கு நான் தான் காரணம் என்னுடைய சிந்தனை செயல் பழக்கம் என்னுடைய தொடர்புகள் தான் காரணம் என்று உணர்ந்து புதியதாய் என்னை பரிணமித்து கொண்டேன்.
அதன் பிறகு சமூக ஊடகங்கள் மூலம் எனது சந்தையை நிலைநிறுத்தி கொண்டு வியாபாரத்தை செம்மை படுத்த ஆரம்பித்துவிட்டேன்.மனதளவில் அனைத்து சிக்கல்களில் இருந்தும் வெளிவந்துவிடலாம் என்றும் உணர்ந்து விட்டேன். கேடு வருவதவதிலும் ஒரு நன்மை இருக்கிறது கூட இருப்பவர்களை நீட்டி அளக்கும் கோலாக கேடு இருக்கும் என்றார் சாக்கிய முனி!
அதுபோல் பல இடங்களில் இருந்து ஆதரவு உதவிகள் துணையருப்புகள் என்று சப்போர்ட்கள் தொடர்ந்தன.என்னுடைய வாடிக்கையாளர்கள் ஒரு சிலரை தவிர பலர் நீ தொடர்ந்து வியாபரம் செய் !நாங்கள் பொறுத்துஇருக்கிறோம் என்று நம்மிக்கையை வெளிபடுத்தினர்
என்னை போலவே அதிக சிக்கல்களுக்கு ஆளான நிறுவனம் தான் கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் ஏறக்குறைய 3000 வாடிக்கையாளர்களுக்கு மனைகள் கொடுக்க வேண்டிய கமிட்மெண்ட் இருக்கிறது.என்னுடைய நிறுவனத்திற்கும் இதே அளவு வாடிக்கையாளர்கள் சவால் இருக்கிறது.சரி நம் பாரத்தை மட்டும் சுமக்காமல் நான் முகவராக வேலை பார்த்து இருக்கிறேன் இந்த தங்க முருகன் ரியல்எஸ்டேட்டில் அந்த நன்றியுணர்ச்சிக்காக அந்த நிறுவனத்தையும் சேர்ந்து இழுத்துகொண்டு செல்வோம் என்று துணிந்து கடந்த ஆறு மாநங்களாக அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் தணிக்கை செய்து அந்த நிறுவனத்தின் பிரச்சினையின் ஆழம் எவ்வளவு என்று பார்த்து விட்டேன்.தற்பொழுது தங்கமுருகன் ரியல்எஸ்டேட் நிறுவனர் ஜே.கருப்பசாமி அவர்களுடன் தலைமை நிர்வாகி சோலை மலை அவர்களுடன் மதுரையில் பேசி அந்த நிறுவனத்தின் முழு வியாபார நிறுவனத்தையும் என் தலைமையின் கீழ் நடத்துவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறோம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-நொழில் முனைவர்
9841665836