சீர்காழி நகரில் தபால் நிலையம் பின்புறம் ஒரு கோடி செலவில் புதியதாக நூலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. அந்த நூலகத்தின் நல்நூலகர் வெங்கடேசன் அண்ணன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட நூலகராக இருக்கும் பொழுதே நல்ல அன்பும் மரியாதையும் என்மீது வைத்து இருப்பவர். அவர் திருவண்ணாமலை மாவட்ட நூலகத்தை திறம்பட நிர்வகித்து நிறைய மாணவர்களுக்கு பயன்படும் வண்ணம் உழைத்து வந்தவர். தற்பொழுது சீர்காழி புதிய நூலகத்திற்கு நூலகராகி பணியேற்று இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து நூலகத்திற்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்த மகிழ்வான தருணம். உடன் சீர்காழி வாசகர் செம்மலர் வீரசேனன் அவர்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#library #new #Sirkazhi #librarian #good_librarian #Venkatesan #love #respect #Tiruvannamalai #joyous_moment #gift #nilamungalethirgalam #book #tamilbook