சென்னையில் ஒரு குட்டி தாராவி
மைலாப்பூர் லைட்அவுஸ் அருகில் இருக்கும் மீனவர் குடியிருப்புதான் நொச்சி நகர் நொச்சிக் குப்பம் பகுதி !
அங்கு ஒரு நிலத்திற்காக அட்வான்ஸ் போட சென்று இருந்தேன். குப்பத்தற்குள் உள்ளே நுழைந்து அப்படியே ஒரு நீள் பார்வை பார்த்தேன்!
நீளமான அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒவ்வொரு தளமும் ஒரு நீளமான காலனி போல் இருக்கிறது. மாடிகுள்ளேயே இருக்கின்ற வீடுகள் சிறிய செலவுகள் வாங்க மளிகைகடை மிட்டாய்கடை போட்டு இருக்கிறார்கள்.
வீட்டிற்குள் வைக்க இடமில்லாமல் வாசலில் குடங்கள் பாத்திரங்கள் துணிமணிகள் என்று வாசலில் வைத்து இருக்கிறார்கள்.
இப்படி நெருக்கமான வீடுகளையும் குறுகலான பாதையையும் பார்க்கும்பொழுது
லேசா மும்பை தாராவி feel வருகிறது.
மீனவ பெண்கள் இடுப்பில் மீன் அல்லது கருவாடு கூடை தூக்கிக் கொண்டு தங்கள் தோழிகளுடன் ஊர்கதை பேசிக் கொண்டே நடந்து செல்வது!
இப்பொழுதான் ஆம்பளையாய் ஆகி இருக்கும் இளைஞர்கள் கருப்பு கோரைபுல்லை தலையில் செங்குத்தாக வளர்த்துக் கொண்டு விடலை கதைகள் பேசிகொண்டு நிற்கிறார்கள்.
நான் சிறிய வயதில் இருக்கும் பொழுது நொச்சி நகரில் லைட்அவுஸ் பாலன் மாமா வீட்டிற்கு கூட்டி செல்வார்கள்! என்னுடன் படித்த ஆசைதம்பி வீட்டிற்கு சென்று இருக்கிறேன் அதெல்லாம் பழைய குடியிருப்புகள் நிறைய இடைவெளிகள் காற்றோட்டம் நிறைய இருக்கும்.
இப்பொழுது முற்றும் முதலுமாக கான்கிரீட் கட்டடங்களாக குறைந்த இடைவெளியில்
காற்றோட்டம் குறைந்த குடியிருப்பாக மாறி நிற்கிறது.
சென்னையில் இதேபோல் பல குடிசைமாற்று வாரிய வீடுகளை எல்லாம் மாற்றி கட்ட போகின்ற திட்டம் இருக்கிறது.பாவம் சென்னை அடிதட்டு மக்கள்! குடிதண்ணீர் பற்றாகுறை! குறைவான இடத்தில் அதிகம் பேரை வாழ வைத்தல், பராமரிக்கபடாத கட்டடங்கள் என்று இவைகளுடன் மகிழ்ச்சியுடன்
வாழ பழகிவிட்டார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#small #Dharavi #Chennai #Nochi _Nagar #Nochikkuppam #area #fisherman #residence #Mylapore #Lighthouse #elongated #colony #Mumbai_Dharavi