1990 முதல் 1995 வரை தமிழக முழுவதும் நத்தம் நில வரி திட்ட சர்வே செய்யப்பட்டது ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தமிழக முழுவதும் முழுமையாக நில வரி திட்ட சர்வே நடக்கவில்லை நடந்திருந்தாலும் அவைகளில் தப்பும் தவறுமாக நடந்திருக்கிறது பல இடங்களில் தோராயப் பட்டா மட்டும் கொடுத்திருக்கிறார்கள் தூயப் பட்டா கொடுக்கவில்லை இன்று வரை நத்தம் நிலங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்லைன் ஆகவில்லை அதனால் பல போலி ஆவணங்கள் டபுள் டாகுமென்ட் சிக்கல்கள் இன்று வரை நத்தம் நிலங்களில் அதிகமாக இருக்கிறது எனவே அதை பற்றிய முழுமையான தெளிவு மற்றும் கொள்கை முடிவு அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவைப் படுகிறது அதனால் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் தமிலகத்தின் சர்வே துறையினருக்கு சில தகவல்களை கேட்டு RTI மூலம் மனு செய்துள்ளோம்
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்