தமிழகம் முழுவதும் சுற்றி வரும் போது அந்த அந்த வட்டார வழக்கில் நிலங்கள் சம்பந்தப்பட்ட வார்த்தை பதங்களை கேட்கும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்கும். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.
1. சொத்தின் நான்கு எல்லை விவரங்கள் என்று தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் போடுவார்கள், இருந்தாலும் தென் மாவட்டங்களில் நான்குமால் அல்லது வெறும் மால் என்று எழுதுவார்கள். திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் தச்சுமுழம் என்று பேச்சுவழக்கில் சொல்கிறார்கள்.
2. சென்னை & சுற்று வட்டாரத்தில் செக்குபந்தி என்றும், Shedule என்றும் ஆங்கில வார்த்தையை ஷெட்யூல் என்று தமிழிலும் எழுதுகிறார்கள்.
3. அதேபோல் VAO என்று சென்னையில் சொன்னால் , மணியகாரர் என்று கொங்கு,வேலூர் பகுதிகளிலும் கிராமஸ் என்று நெல்லை பகுதிகளிலும் , பழைய ஆட்கள் முன்சீப்,கெர்ணம் என்றும் கிராம நிர்வாக அதிகாரி என்று பொதுவாகவும் சொல்லபடுகிறது.
4) அதே போல் கிராம நிர்வாக உதவியாளரை , VAO ASSISTANT என்றும் தண்டல்காரர் என்று கொங்கு பகுதியிலும் , தலையாரி என்று பிற பகுதிகளிலும் சொல்கிறார்கள்.
4. நிலத்தின் சர்வே எண்ணை புல எண் என்றும் , சர்வே எண் என்றும் பரவலாகவும், காலம்சர்வே நம்பர் என்றும், க.ச.எண் என்றும் காளை நம்பர் என்றும் கொங்கு பகுதிகளில் சொல்கிறாகள். அந்தகால பத்திரங்களில் செட்டில்மெண்டு கணக்கு இல்லாத கிராமங்களில் அடங்கல் கணக்கு மட்டுமே இருக்கும் அது பைமாஷ் நம்பர் என்று குறிப்பிடபட்டு இருக்கும்.
5. நிலத்தை பூமி என்றும், சைட் என்றும், கொங்கு பகுதிகளில் நிலம் என்றும் , மனை என்றும், பிற பகுதிகளில் சொல்கிறார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.