பத்தாண்டுகளுக்கு முன் மாத தவணை திட்டத்தில் மனை வாங்கி பத்திரம் செய்துவிட்டு பத்திரத்தை வாங்காமல் இருந்துவிட்டனர்.என்ன கஷ்டமோ அவரகள் இடம் மாறி சென்றுவிட்டனர்.நாம் பல்வேறு முறைகளில் தொடர்புகொண்டும் கடிதம் எழுதியும் பிடிக்க முடியிவில்லை!
இதற்கென்று வேலாயுதம் என்று தனி களப்பணியாளர் நியமித்து இதுபோன்று பத்திரம் வாங்காத ஆட்களை தேடி வீடு வீடாக அனுப்பி வைத்து இருந்தேன்.பாதி பணம் கட்டினால் பத்திரம் போடும் திட்டத்தில் பத்திரம் போட்டுவிட்டு மீதிபணம்கட்டாமல் பத்திரம் வாங்காமல் 400 பத்திரங்களுக்கு மேல் இருக்கிறது.அந்த பத்திரங்கள் எல்லாம் பத்திரமாக பத்து வருஷமாக பேங்க் லாக்கரில் வைக்க ஆண்டுதோறும் வங்கிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
இப்பொழுதுதான் ஒரு நபர் தேடி வந்து இருக்கிறார்! அப்பாடா என்று இருக்கிறது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

 
www.paranjothipandian.com
#Ten_years_ago #bought #land #monthly_installment #plan #buy #deed