திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!
திரு.வெங்கடேசன் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நூலகத்தின் நூலகர்!
பழகுதற்கு இனியவர். வா கண்ணு போ கண்ணு வா ராஜா போ ராஜா என்று அழைத்து தன்னை சுற்றி இருக்கின்ற உதவியாளர் பணியாளர்களை அழைத்து நூலக காரியங்களை நகர்த்தி விடுகிறார். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழக அரசின் நூலக துறை தேர்வு செய்து அவரின் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை எடுத்து அடுக்கி வைக்கும் பொழுது படித்து பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டு மழை பொழுந்தார். நகை எல்லாம் அடமானம் வைத்து சேமிப்பு எல்லாம் சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறோம். நிலம் வாங்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அறியாமலேயே இருக்கிறோம். மக்களுக்கு தேவையானதை எழுதி இருக்கிறீர்கள் என்று உளமார பாராட்டினார்
சில நாட்கள் கழித்து நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு எனக்கு தேவையான reference புத்தகம் ஆன்லைனிலும் சென்னை பாண்டிசேரி நூலகங்களிலும் கிடைக்கவில்லை. தேடி பார்த்து தேடி பார்த்து கொஞ்சம் அலுத்து விட்டேன். அதன் பிறுகு அண்ணனுக்கு ஒரு வாட்ஸ்அப் தகவல் அனுப்பினேன். இந்த புத்தகம் வேண்டும் என்று இரண்டு நாள் கழித்து எனக்கு pdf புத்தகமாக வாட்ஸ்அப்பில் வந்தது
உண்மையிலே மிக மகிழ்ச்சி அடைந்தேன்.தற்பொழுது திருவண்ணாமலை கள பணிக்கு வந்த பொழுது அவரை சந்தித்து நன்றி தெரிவித்து விட வேண்டும். அவரை சந்தித்தேன் நூலகத்தையும் பார்வையிட்டேன்
அதிக புரவலரை தேடி அவர்கள் வீடுகளுக்கு சென்று காத்துருந்து நூல்கள் வைப்பதற்கான ரேக்குகள் சேர்கள் நாற்காலிகள் பெற்றுள்ளார்.எம்பி எம்எல்ஏக்களை சந்தித்து போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி அறை புத்தகங்கள் என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்.சிறந்த ஆசிரியருக்கு எப்படி தமிழக அரசு நல்லாசிரியர் என்று விருது கொடுக்கிறதோ அதேபோல் நல் நூலகர் என்று நூலகர்களுக்கு வழங்குகிறார்கள். அந்த நல்நூலகர் என்ற விருதினையும் பெற்று இருக்கிறார். மூன் சிட்டி என்ற ரோட்டரி கிளப்பிலும் இணைத்து கொண்டு அதன் மூலமும் கிராமபுற பெண்களுக்கு தையல் பழதல் கைத்தொழில் பழகுதல் என்று உழன்று கொண்டு இருக்கிறார்
கொரானா நெருக்கடி முடிந்த பிறகு நூலக வாசகர் வாசகர் வட்டத்தில் நிலம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறேன் என்றும் என்னை ஊக்கபடுத்தி இருக்கிறார். திருவண்ணாமலை சுற்று வட்டார மாணவர்கள் மாணவிகள் போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் இந்த நூலகத்தையும் இந்த நல் நூலகரையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834