“நத்தம் பட்டாவில்இரயத்து நிறுத்தப்பட்டது”
ஈரோடு,பெருந்துறை,மொடகுறிச்சி,கொடுமுடி தாலுகா கிராம நத்தம் நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கான “இரயத்து நிறுத்தபட்டது” பற்றி விழிப்புணர்வு பிரச்சார பயணம்.
அன்புடையீர்!
தமிழகம் முழுதும்1990-1996 கால கடத்தில் நடந்த நத்தம் நிலவரி திட்ட சர்வே முழுமை பெறாமலும் நிறைய கிராமங்களில் சர்வே நடக்காமலும் கூட இருக்கிறது.அதுபோல ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு,பெருந்துறை,மொடகுறிச்சி,கொடுமுடி தாலுகாவில் கிராமநத்தம் சர்வேயில் பட்டா கொடுக்காமல் இரயத்து நிறுத்தபட்டது என்று நிறுத்தி வைத்து இருந்தனர்.
அதற்கு கிராம வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவலை கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த படவில்லை என்றால் இப்படி இரயத்து நிறுத்தபட்டது என்ற விவரமே எனக்கு தெரியாமல் போச்சு என்று அங்கலாய்ப்பில் எதிர்காலத்தில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
அரசு அரசாணை போடும், செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்கும், முகாம் அமைக்கும், மனுக்களை அரசு அதிகாரிகள் பெற்றுகொள்வார்கள்..வந்த மனுவிற்கு தகுதி வாய்ந்தற்கு பட்டா கொடுப்பார்கள் பிறகு முகாமை நிறுத்திவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள்.அதனால்இரயத்து நிறுத்தபட்டதற்கு பட்டா கொடுக்க முகாம் போடும் பொழுது அரசு அதிகாரிகள் அதில் முழு கவனம் செலுத்துவார்கள்.இந்த நேரத்தில் பட்டா வேண்டுவோர் மனு செய்யாமல் தவற விட கூடாது.ஆனால் விவரம் தெரிந்த பட்டறிவு, படிப்பறிவு இருக்கும் மக்கள் பல்வேறு கவன சிதறலில் ஆசாபாச உணர்ச்சி சிக்கலில் இருக்கும் பொழுது இந்த பட்டா மனு செய்யும் வாய்ப்பை தவற விட்டு விடுவார்கள் அப்படிபட்ட சம்சாரிகளுக்கும்
விவரமே புரியாமல் நத்தம் என்றால் என்ன?நத்தம் நிலவரி திட்டம் என்றால் என்ன?நத்தம் சர்வேக்கு முன்பே பத்திரங்கள் இருக்கிறது ஆனால் பட்டா வேறு பெயரில் வேண்டும்.நிலத்தில் அளவுபிழை உருவ பிழை உள்ளதை சர்செய்ய வேண்டும்.பட்டா யார் பெயரில் கோருவதற்கு பங்காளி தகறாறு இருக்கிறது? போன்ற எழுவினாக்களுக்கு விடையளித்து குழந்தையை கையை பிடித்து கூட்டி கொண்டு போவது போல அரசு எந்திரத்திடம் கூட்டி செல்ல வேண்டிய நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள்
மேலும் வெளியூர்,வெளிநாடுகளில் இராணுவத்தில் என்று இருந்து கொண்டு தன் சொந்த கிராமத்தில்பட்டா கொடுக்கும் வாய்ப்பை தெரியாமலும் இருக்கிறார்கள்.இப்படிபட்டவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் கட்டாயம் தேவை!
வருகின்ற மார்ச் 10, 11, 12தேதிகளிலும் கொடுமுடி,மொடகுறிச்சி,பெருந்துறை,ஈரோடு தாலுகாக்ககளில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் காரில் சுற்றுபயணம் மேற்கொண்டு 50,000 சிறு துண்டறிக்கைககள் விநியோகித்தலும். திண்ணை பிரச்சாரமும் சிறு கூட்ட பிரச்சாரமும் செய்ய விருக்கிறேன்.மேலும் தொண்டு நிறுவனங்கள், சமூக பொறுப்புள்ள அறகட்டளைகள்,சட்ட விழிப்புணர்வு இயக்கங்கள் தங்கள் கிராமங்களில் தங்கள் பெயரில் துண்டறிக்கை பிரச்சாரமும் விழிப்புணர்வு முகாமும் நடத்த விரும்பினால் அதற்கும் உறுதுணையாக நிற்க தயாராக இருக்கிறேன்.
இந்த நேரடி பிரச்சாரத்திற்கு முன்பே சமூக ஊடகங்ளிலும் பத்திரிக்கை தொலைகாட்சி ஊடகங்களிலும் முடிந்தவரை விழிப்புணர்வு செய்தி பரப்படும்.
இந்த பிரச்சார பயணம் மற்றும் பிரச்சாரம் மக்களிடம் போய் வெற்றிகரமாக போய் சேர என்மீது தனிபட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட வாசகர்கள்..நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளையினர்.நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையத்தினர்,ரியல்எஸ்டேட் தொழில் முனைவர்கள்.ஆவண எழுத்தர்கள், சட்ட ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்.
வாய்ப்பு இருப்பவர்கள் நோட்டீஸ் அச்சடித்து கொடுக்கலாம், உங்கள் கிராமங்களில் பிரசார முகாம் ஏற்பாடு செய்யலாம், உணவுகள், பெட்ரோல் உதவி செய்யலாம், நிதியாகவும் வழங்கலாம். ஒரு நல்ல செய்தி மக்களிடம் சென்று சேர பொருளாதாரமும் அவசியம் என்றுணர்ந்து பக்கபலமாக இருக்க வேண்டுகிறேன்.நன்கொடையாளர்கள் பெயர் www.paranjothipandian.com இணையதளத்தில் வெளியிடபடும்.நோட்டீஸ்அச்சடித்து கொடுப்பவர்கள் அவர்கள் தொழில்நிறுவன பெயரை சேர்த்து அச்சடித்து கொடுக்கலாம்.
மொடக்குறிச்சிதாலுகாவில் உள்ள கிராமங்களின் விவரங்கள்:-
- புஞ்சை லக்காபுரம்
- புஞ்சைலக்காபுரம்
- சாத்தம்பூர்
- காங்காயம்பாளையம்
- நஞ்சை ஊத்துக்குளி – அ
- குருக்கபாளையம்
- நஞ்சை காளமங்களம்
- நஞ்சை காளமங்களம் – அ
- மொடக்குறிச்சி – அ
- காகம்
- எழுமாத்தூர் – அ
- ஈஞ்சம்பள்ளி – ஆ
- ஈஞ்சம்பள்ளி – அ
- குலவிளக்கு – அ
- பழமங்கலம்
- நஞ்சை ஊத்துக்குளி – ஆ
- புஞ்சை காளமங்கலம் – ஆ
- மொடக்குறிச்சி – ஆ
- எழுமாத்தூர் – ஆ
- ஈஞ்சம்பள்ளி – ஆ
- குலவிளக்கு – ஆ
- கனகபுரம் – அ
- கனகபுரம் – ஆ
- பூந்துறைசேமூர்
- துய்யம்பூந்துறை – அ
- கஸ்பாபேட்டை – அ
- புதூர் – அ
- அவல்பூந்துறை – அ
- கனகபுரம் – ஆ
- துய்யம்பூந்துறை – ஆ
- கஸ்பாபேட்டை – ஆ
- புதூர் – ஆ
- அவல்பூந்துறை – ஆ
- துய்யம்பூந்துறை – இ
- அவல்பூந்துறை – இ
- முகாசி அனுமன்பள்ளி – அ
- அட்டவணை அனுமன்பள்ளி – அ
- அரச்சலூர் – அ
- வடுகப்பட்டி – அ
- விளக்கேத்தி – அ
- விளக்கேத்தி – ஆ
- வேலம்பாளையம் – அ
- முகாசி அனுமன்பள்ளி – ஆ
- அட்டவணை அனுமன்பள்ளி – ஆ
- அரச்சலூர் – ஆ
- வடுகபட்டி – ஆ
- விளக்கேத்தி – ஆ
- வேலம்பாளையம் – ஆ
- அரச்சலூர் – இ
- வடுகப்பட்டி – இ
கொடுமுடி தாலுகாவில் உள்ள கிராமங்களின் விவரங்கள்:-
- கொங்குடையாம்பாளையம்
- கொல்லன்கோயில் – அ
- அஞ்சூர் – அ
- சிவகிரி – அ
- அஞ்சூர் – அ
- கொந்தளம் – அ
- கொந்தளம் – அ
- கொல்லன் கோயில் – ஆ
- சிவகிரி – ஆ
- அஞ்சூர் – ஆ
- கொந்தளம் – ஆ
- சிவகிரி – இ
- கொளத்துபாளையம் – அ
- புஞ்சை கொளாநல்லி – அ
- புஞ்சை கிளாம்பாடி – அ
- பாசூர்
- நஞ்சை கிளாம்பாடி
- நஞ்சை கொளாநல்லி
- ஊஞ்சலூர்
- கொளத்துப்பாளையம் – ஆ
- புஞ்சை கொளாநல்லி – ஆ
- புஞ்சை கிளாம்பாடி – ஆ
- வெங்கம்பூர் –அ
- இச்சிபாளையம் – அ
- வடிவுள்ளமங்கலம்
- கொடுமுடி – அ
- வடிவுள்ள மங்கலம்
- எழுநூத்திமங்கலம் – அ
- எழுநூத்திமங்கலம் – ஆ
- சென்னசமுத்திரம் –அ
- ஆவுடையா பாறை
- ஆவுடையா பாறை
- வெங்கம்பூர் – ஆ
- இச்சிபாளையம் – ஆ
- கொடுமுடி – ஆ
- எழுநூத்திமங்கலம் – ஆ
- சென்னசமுத்திரம் – ஆ
ஈரோடு தாலுகாவில் உள்ள கிராமங்களின் விவரங்கள்:-
- சித்தோடு
- சித்தோடு
- தயிர்பாளையம்
- தயிர்பாளையம்
- தயிர்பாளையம்
- நசியனூர் – அ
- ஆட்டையாம்பாளையம்
- வில்லரசம்பட்டி – ஆ
- கங்காபுரம்
- வில்லரசம்பட்டி – அ
- நசியனூர் –அ
- தோட்டாணி
- தோட்டாணி
- தோட்டாணி
- கதிரம்பட்டி
- தோட்டாணி
- வேப்பம்பாளையம்
- புத்தூர் புதுப்பாளையம்
- கதிரம்பட்டி
- கதிரம்பட்டி
- வில்லரசம்பட்டி- ஆ
- வில்லரசம்பட்டி – ஆ
- நசியனூர் – ஆ
- மேட்டுநாசுவம் பாளையம்
- எலவமலை
- மேட்டுநாசுவம் பாளையம்
- அணைநாசுவம்பாளையம்
- சூரியம்பாளையம்
- குமிலம்பரப்பு
- குமிலம்பரப்பு
- சர்க்கார் பெரிய அக்ரஹாரம்
- சூரியம்பாளையம் – ஆ
- பெரியசேமூர் – அ
- பிரமான பெரிய அக்ரஹாரம்
- நஞ்சை தளவாய்பாளையம்
- வைராபாளையம்
- ஈரோடு – அ
- திண்டல்
- திண்டல்
- சூரம்பட்டி
- பி எஸ் அக்ரஹாரம்
- பி எஸ் அக்ரஹாரம்
- பீளமேடு
- வெண்டிபாளையம்
- பெரியசேமூர் – ஆ
- ஈரோடு – ஆ
- ஈரோடு – இ
பெருந்துறை தாலுகாவில் உள்ள கிராமங்களின் விவரங்கள்:-
- கருமாண்டிசெல்லிபாளையம் – அ
- பாலக்கரை
- சீனாபுரம்
- பெரிய வீரசங்கிலி
- பெரிய வீரசங்கிலி
- மேட்டுப்புதூர்
- மேட்டுப்புதூர்
- சீனாபுரம்
- சீனாபுரம்
- துடுப்பதி
- துடுப்பதி
- பட்டக்காரன்பாளையம்
- பட்டக்காரன்பாளையம்
- பட்டக்காரன்பாளையம்
- பட்டக்காரன்பாளையம்
- பொன்முடி
- விஜயபுரி
- விஜயபுரி
- விஜயபுரி
- விஜயபுரி
- பொன்முடி
- பெருந்துறை – அ
- கருமாண்டிசெல்லிபாளையம் – ஆ
- பெருந்துறை – ஆ
- பெத்தாம்பாளையம் – அ
- பெத்தாம்பாளையம் – அ
- பள்ளபாளையம் – அ
- காஞ்சிக்கோவில் – அ
- முள்ளம்பட்டி
- முள்ளம்பட்டி
- கந்தாம்பாளையம்
- கந்தாம்பாளையம்
- கந்தாம்பாளையம்
- திருவாச்சி – அ
- திருவாச்சி – ஆ
- பெத்தாம்பாளையம் –ஆ
- பள்ளபாளையம் – ஆ
- காஞ்சிக்கோயில் – ஆ
- திருவாச்சி – ஆ
- தோரணவாவி
- தோரணவாவி
- பாப்பம்பாளையம்
- பாப்பம்பாளையம்
- திங்களூர்
- கருக்குபாளையம்
- நிச்சாம்பாளையம்
- பாண்டியம்பாளையம் – அ
- சிங்காநல்லூர்
- நல்லாம்பட்டி
- செல்லப்பம்பாளையம்
- செல்லப்பம்பாளையம்
- செல்லப்பம்பாளையம்
- பாப்பம்பாளையம்
- பாப்பம்பாளையம்
- பாண்டியம்பாளையம்
- சிங்காநல்லூர் – ஆ
- முகாசிப்பிடாரியூர் –அ
- அட்டவணைப்பிடாரியூர் – அ
- சென்னிமலை – அ
- வாய்ப்பாடி
- சிறுகளஞ்சி
- சிறுகளஞ்சி
- புஞ்சை பாலத்தொழுவு
- புஞ்சைபாலத்தொழுவு
- கொடுமணல்
- புதுப்பாளையம்
- எல்லைக்கிராமம்
- எக்கட்டாம்பாளையம் – அ
- பசுவப்பட்டி –அ
- முருங்கத்தொழுவு – அ
- முருங்கத்தொழுவு – ஆ
- முகாசிப்பிடாரியூர் – ஆ
- சென்னிமலை – ஆ
- எக்கட்டாம்பாளையம் – ஆ
- பசுவப்பட்டி – ஆ
- முருங்கத்தொழுவு – ஆ
- வரப்பாளையம்
- வரப்பாளையம்
- ஈங்கூர் – அ
- வடமுகம் வெள்ளோடு – அ
- புங்கம்பாடி
- கவுண்டிச்சிபாளையம் – அ
- வடமுகம் வெள்ளோடு – அ
- தென்முகம் வெள்ளோடு – அ
- ஈங்கூர் – ஆ
- வடமுகம் வெள்ளோடு – ஆ
- கவுண்டிச்சிபாளையம்- ஆ
- தென்முகம் வெள்ளோடு – ஆ
ஈரோடு கோட்டம் நத்தம் பட்டா சிறப்பு முகமாமை ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள மக்கள் விழிப்புணர்வோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
பொதுநலன் கருதி பரப்புரை செய்பவர்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நூலாசிரியர்-நிலம் உங்கள் எதிர்காலம்
நிறுவனர்-நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை
நத்தம் பட்டா வழங்குவதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் DOWNLOAD செய்து கொள்ளலாம்
2. ரயத்துவாரி நத்தம் நிறுத்தப்பட்டது
6. கிராம நிர்வாக அலுவலர் வாக்கு மூலம்
நன்கொடைக்கு
Name: NilamUngalEthirkalamMakkalNalaArakattalai
Account No: 433505000300
IFSC code : ICIC0004335
ICICI Bank, G P Road Branch
Gpay/phone pay 80566 94288
மேலதிக தொடர்புக்கு
9841665836,9841665837,9962265834
www.paranjothipandian.in
Email:paranjothip@gmail.com
Youtube: https://youtu.be/Slk4WgucJVw
#paranjothi_pandian #naththam #patta #rayadvari #village #நிலவரி #சர்வே #ஈரோடு #பெருந்துறை #மொடகுறிச்சி #கொடுமுடி #erode #perundurai #kodumudi #motakurichchi #பட்டா #awareness #முகாம்கள் #camp #government_order #மனு #நத்தம் #realestate #advocate