நிலசீர்திருத்தததுறை-காசாகிராண்டு-வீடு வாங்கிய சம்சாரிகள்


சென்னை பழைய மகாபலிபுர சாலை  தாழம்பூர் பகுதியில் காசா கிராண்ட் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஸ்மார்ட் டவுன் என்கிற அடுக்குமாடி குடியிருப்பை கட்டினார்கள். . இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.  


இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு பட்டா கேட்டு வீடு வாங்கியவர்கள் காசா கிராண்ட் நிறுவனத்தை நாடியுள்ளனர். மேற்படி அடுக்குமாடி குடியிருப்பின் அடிமனை பூராவும் நிலசீர்திருத்த துறையில் அனாதீனம் ஆக்கபட்டுள்ளது.

காசா கிராண்டில் கோடிகணக்கில் கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.எஸ்டேட் ஒழிப்பு,அனாதீனம் போன்ற நிலநிர்வாகத்தின் ஆணி வேர் தெரியாமல் காசா கிராண்டை மாட்டிவிட்டார்களா? அல்லது காசா கிராண்ட் இலாப வெறியில் மாயையில் மாட்டிகொண்டார்களா என்று தெரியவில்லை!


4ஆண்டுகளுக்கு முன்பே இந்த தகவல் நமக்கு தெரிந்ததுதான்.நிலசீர்திருத்த துறையை AC அலுவலகத்தை நல்ல வேளை கலைத்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்கள்.இல்லை என்றால் நிலசீர்திருத்த துறை பட்டா கொடுப்பதும் இரத்து செய்வதும் என்று இன்றுவரை பல. அனாதீன குழப்பங்களை செய்து கொண்டு இருப்பார்கள்.


தற்பொழுது இது காசா கிராண்ட் தவறாக சித்தரிக்கபடுகிறது. உண்மையில் நிலசீர்திருத்ததுறையின் தவறு. எந்த அதிகாரி பட்டா கொடுத்தாலும் அது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நில சீர்திருத்த துறையில் பட்டா கொடுக்க Form A, Form B, Form C,Form D, Form F என்று நடைமுறைகள் இருக்கிறது. அவற்றை கடைபிடிக்காமல் பட்டா கொடுத்து இருக்கிறார்கள். காசா கிராண்ட் நிறுவனமும் பட்டா கொடுத்து விட்டார்கள் அது சட்டத்திற்கு உட்பட்ட பட்டாவா என்று பார்க்கவில்லை!

அதனால் நிலத்தை பற்றி தெரியாத சம்சாரிகள் வீடுகளை வாங்கிவிட்டு மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.


மேற்படி சிக்கல் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என்று விசாரணையில் இருக்கிறது. அந்த முயற்சியோடு அரசிடம் இருந்து அசைன்ட்மெண்டு பணம் கட்டி கேட்கலாம் ஆனால் Revenue Standing Order RSO 21 வும் நிலஉச்சவரம்பு DSL (Disposal of Surplus land) விதிகளும் வீடு வாங்கிய சம்சாரிகளுக்கு உட்காரவில்லை.சிறப்பு அரசாணை போட்டு சம்சாரிகளுக்கு கண்டிசனுடன் பணம் கட்ட கூடிய பட்டா கேட்கலாம். காசா கிராண்ட் முன்முயற்சி எடுத்து செய்து தனது Reputation ஐ காப்பாற்றி கொள்ள வேண்டும்


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

நூலாசிரியர்-நிலம் உங்கள் எதிர்காலம்

9841665836

www.paranjothipandian.in

#Land_Reforms #Casagrandu #house_purchased #patta #படடா #Revenue_Standing_Order #RSO #DSL #Disposal_of_Surplus_land #Reputation