அன்பான தோழமைகளே!!

சமூக ஊடகங்களில் நிலம் சம்மந்தமாக எழுதுவதாலும் பேசுவதாலும் நிறைய பேர் தங்கள் சந்தேகங்களை கேட்க என்னை தொடர்பு கொள்கிறார்கள். அப்படி தொடர்பு கொள்ளும் பொழுது தலையில் வண்ண வண்ண மலர்களால் பூ மழை பெய்வது போல இருக்கும். ஆனால் ஒரே நாளில் அனைவரிடமும் பேசிவிட முடியவில்லை.இரண்டலிருந்து மூன்று மணிநேரம் வரை பேசுவதற்கு என்று நேரம் ஒதுக்கி பேசுகிறேன். 20 அழைப்புகள் பேச வேண்டும் என்று நினைத்து நோட்டு பேனாவுடன் உட்காருவேன். ஆனால் 8வது அழைப்பிலேயே இரண்டு மணி நேரம் முடிந்து விடுகிறது. சிலர் நறுக்கென்று பேசிவிடுகின்றனர். சிலர் பட்டு கத்தரித்தார் போல் தெளிவாக சொல்லி விடுகின்றனர்.

சிலர் அழுதும் பிறரை திட்டியும் குடத்தில் தண்ணீர் தளும்புவது போல தளும்பியே சொல்ல வேண்டிய செய்தியை காற்றிலே பேப்பர் இராக்கெட் பறப்பது போல பறக்க விட்டு விடுகின்றனர். சிலர் சூடான வெந்நீர் டீக்கடை பாய்லரில் கொதிப்பது போல கொதிக்கின்றனர். இவர்களிடம் எல்லாம் பேச நிலம் பற்றிய அறிவு இருந்தால் மட்டும் போதாது .அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து அன்பின் கட்டி பிடித்தல் அரவணைப்புடன் நான்கு இதமான மயில் தோகை வருடல் போல பேசீனால்தான்heal ஆகி போனை வைக்கிறார்கள்.

மக்கள் நிலம் பற்றிய சிக்கலை விட அதனால் வருகின்ற மன அழுத்தமும் சுற்றத்தாரின் துரோகங்களை தாங்காமல் மண்டை வெடித்து விடும் அளவு அழுத்ததோடு்வருகின்றனர்.பிரசர் குக்கரில் இருக்கும் வால்வை திறந்து விடுவது போல நான் அவர்களின் வால்வை திறக்க அரை மணி நேரமாவது ஆகிவிடுகின்றது. அதனால் நிறைய அழைப்புகளை நேரடியாக எடுக்க முடியவில்லை. அதனால் கொஞ்சம் அழைப்புகள் நம்டீம் மெம்பர்களிடம் கொடுத்து பேச சொல்கிறேன்.

மேலும் மெசஞ்சரிலும் வாட்ஸ்அப்பிலும் யூடியூபிலும் டங் டங் டங் என்று சத்தமிட்டு கொண்டே நிறைய கேள்விகள் வருகிறது தாமதமானாலும் அதற்கு எல்லாம் முழுமையாக நீரோடை போல தேங்காமல் பதில் அளித்து விடுகிறேன்.

இது மட்டும் இல்லாமல் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வாய்க்காலை மடை மாற்றி விடுவதை போல முகநூலில் நிலம் -கேள்விகள் -சந்தேகங்கள் என்ற குழுவும், டெலகிராமில் நிலம்-கேள்விகள் சந்தேகங்கள் என்ற குழுவும் ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சமூக ஊடகங்கள் மூலமே நல்லோர் வட்டமும் அதற்குள்ளே ஒரு அன்பு வட்டமும் உருவாகி பல நண்பர்கள் சந்தேக இருள்களை ஒளிபாய்ச்சி நீக்கி கொண்டு இருக்கின்றனர்.

அன்பு தோழமைகளே சமூக ஊடக நண்பர்களே போன் எடுப்பதில்லை உங்களை பிடிக்க முடியவில்லை என்று நீங்கள் கமெண்டுகளில் போட போட கூழாங்கற்கள் என் தலையில் ஒவ்வொன்றாக வீசி அடிப்பது போல உள்ளது.நான் முடிந்த வரை தினமும் அழைப்புகளுக்கு பேசி கொண்டு இருக்கிறேன்.

அதில் நான் தவறுவதே இல்லை.அழைப்புகளை மிகவும் மதிக்கிறேன்.போன் வராதா என்று 500 ரூபாய் ரிலையன்ஸ் போனையே பார்த்து கொண்டு இருந்த காலம் எல்லாம் உண்டு இந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கு அதனால் அழைப்பின் வலிமை புரியும்.அதனால் என்னையும் புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
டெலகிராம் குழு மிக சிறப்பாக இயங்குகிறது.நில விஷயத்தில் என்னைவிட சான்றோர்கள் அனுபவஸ்தரகள்,புத்தி சாலி இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்று நிறைய பேர் பதில் அளிக்கின்றனர்.அதனால் அதனையும் உங்கள் சந்தேகங்கள் தீர்க்க பயன்படுத்தி கொள்ளவும் நண்பர்களே!

https://t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ

https://www.facebook.com/groups/3200612173295722/

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665837

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இரத்து #பத்திரம் #Cancellation #Deed #பாகபிரிவினை #ஆவணம்  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #செட்டில்மெண்டு #பத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம் #ஈசி #realestate #Partition #Document #settlement #power-of -autorny #uyil #tittle-deed