நில சிக்கலுக்கான களப்பணி ஆய்வு !!!

துபாயில் இருக்கின்ற நண்பர் ஒருவருக்கு மன உளைச்சல் கொடுக்கும் ஒரு நில சிக்கல் தான் வாங்கிய மனை தன்னுடைய எதிர் மனுதார்கள் பெரிய காம்பவுண்டு சுவர் போட்டு தங்கள் அனு போகத்திற்கும் கட்டுபாட்டிற்கும் கொண்டு வந்து வழக்கும் போட்டு நீண்ட நாட்களாக இழுத்து கொண்டு இருக்கிறது

வழக்கின் பொறுப்பை தந்தைக்கு பிறகு துபாயில் இருக்கிற தனயன் எடுத்து என்னை யுடுபில் பிடித்து பல்வேறு உரையாடல்கள் உரையாடியும் எனக்கு போதுமான தெளிவு வரவில்லை. எனவே சைட் விசிட் செய்ய தீர்மானித்து 100 கி. மீட்டர் பயணித்து பிரச்சனைக்குரிய இடத்தையும் பார்வையிட்டேன். எனக்கு தேவையான தகவல்களை எல்லாம் தந்தையார் கொடுத்தார்.

என்ன அசௌகரியம் என்றால் அமர்ந்து பேச ஒரு இடம் இல்லை அப்படிபட்ட லொகேசன். இருந்தாலும் வெளிச்சமான இடத்தை பார்த்து என் பையில் ரெடிமேடாக வைத்து இருக்கிற துண்டை (நாமெல்லாம் பஸ் ஸ்டாண்டில் துண்டு விரித்து படுக்கிற ஆள்
என்று அவருக்கு தெரியாது) விரித்து இதில் அமருங்கள் என்று சொன்ன பிறகு தான் என்ன சார் எல்லாம் ரெடியாக வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லியவாறு ஆசைவாசம் அடைந்து அமர்ந்தார்

நீங்கள் தரையில் இருக்றீர்கள் எனக்கு மட்டும் துண்டா என்றார். அய்யா நான் மிலிட்டிரி பேண்ட் அழுக்கு தெரியாது நீங்கள் தும்பைபூ வேட்டி அதனால் என் துண்டில் அமருங்கள் என்று அமர வைத்து என் சந்தேகங்களுக்கு பதில் எல்லாம் பெற்று என் லேப்டாப்பில் ஏற்றிகொண்டு கிளம்பினேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.com

#Field_work #survey #land #problem #landissue #troubling #Dubai #site_visit #location