பரபரப்பான வேலையிலும் இந்த மலையின் அரசியை சைட் அடித்து கொண்டே இருந்தேன்!
வாடிக்கையாளருக்கு என் நிலத்தை கிரயம் செய்ய ஊட்டிக்கு வந்து இருந்தேன்! பத்திரம் தயார் நிலையில் இல்லை! ஆன்லைனில் பணம் கட்டுவது தயார் நிலையில் இல்லை! இன்னும் சில வேலைகள் துரிதமாக நடக்க வில்லை! ஆனால் போன்ற இல்லைகளால் மனது சலிக்கவே இல்லை! ஏனென்றால் ஒரு குளிரூட்டபட்ட அறையில் இருப்பது போல உடல் முழுவதும் சில் உணர்ச்சிகள் ! மேலும் மலையில் பயணபடும்பொழுதே மலைமுகடு, பள்ளதாக்கு! தீப்பெட்டி அடுக்கி வைத்தது போல இருக்கும் வீடுகள்! மலைகளை முத்தமிடும் மேகமூட்டங்கள் என அனைத்தையும் பரபரபான வேலை பளுவிலும் சைட் அடித்து கொண்டே சென்றேன்.
கடலும் மலையும் இயற்கையின் பொக்கிஷங்கள் இந்த இரு இயற்கை படைப்பும் எப்பொழுதும் குதூகலத்தையும் ஞானம் பிறக்கும் போதி மரமாகவும் இருக்கிறது
கடலோரம் பிறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்!அதனால் கடலின் சத்தம் என்னை நீண்ட தியானத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது! மலையின் உச்சியில் நின்று கீழே பார்க்கும் பொழுது அகந்தையை அழித்து இந்த உலகத்தில் நீ சின்ன சிறியவன் என்று உணர வைத்து இருக்கிறது.
இந்த மலையின் கிழக்கு தொடரில் கொடநாடு காட்சிமுனை அருகில் 1500 ஏக்கர் தோட்டம், 50000 சதுரடி பங்களா தடபுடல் பாதுகாப்பு என்று ஆர்பரித்தவர்கள் இப்பொழுது எப்படி ஜீவதிசை அடைந்தார்கள் என்று தெரியவில்லை! இந்த மலையின் மைந்தர்கள் தோடா கோத்தா என்ற பழங்குடிகள் ஒரு செண்டு பரப்புக்கு கீழே நிலத்தை எடுத்து கொண்டு மலையோடு காற்றோடும் பிணைப்போடு வாழ்ந்து மனசாந்தியுடன் வாழ முடிவதையும் பார்க்க முடிகிறது.
இந்த மலையின் வடமேற்கு மூலையில் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் கடவுள் குருவாயூர் பெருமாள் கொடுத்ததாக ஆயிரகணக்கான ஏக்கர் ஜன்ம நிலங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் ஒருகூட்டாத்தாருக்கும் அதனை நிலவரி திட்டத்தோடும் தமிழநாடு அரசு நில நிர்வாகத்தோடும் கொண்டு வர போராடும் பல ஆண்டுகளாக போராடும் சிந்துபாத் கதை போல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மேற்கு மலைபகுதியில் குந்தா அப்பர் பவானி அவலாஞ்சி எமரால்டு பகுதிகள் எல்லாம் தண்ணீர் வளமையை எப்பொழுதும் மலை தன் கருவில் சுமந்து கொண்டு இருக்கிறது! இதனை சீர்செய்தால் தமிழ்நாடு தண்ணீரில் தன் நிறைவு ஆகிவிடும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#queen_of_the_hill #Ooty #bond #Paying #online #air_conditioned #traveling #mountains #ridge #hollow #clouds #kissing_the_mountains #Emerald #Areas