பழைய சிலபஸ் தொழில் அலுவலகமும் அதன் பயனும்

குடும்பம் வேறு வணிகம் வேறு இல்லாத காலத்தில் வீட்டோடு ஒட்டிய அலுவலகம் வீடு வியாபரம் குடும்பம் என்று அனைவரும் சேர்ந்து பங்களிக்கின்ற பாரக்கின்ற வாழ்க்கை அமைப்பு.இப்படி பழைய சிலபஸ் இல் இன்றும் வியாபாரத்தை பலர் நடத்திகொண்டு்இருக்கின்றார்கள்.

முன்பக்கம் வராந்தா அதில் நுழைந்தவுடன் பாய் விரிந்து வைத்து இருக்கும் அலுவலகம் அதன் உட்புரம் ஒரு அறையில் சரக்கு இருக்கும ஒரு குடோன்,அதன் பிறகு வீட்டிற்கான வரவேற்பரை அதன் பிறகு இல்வாழ்க்கைகான வீடு என்று ஒரு கட்டமைப்பு

வியாபரத்தில் அதிக புற நெருக்கடிகள் திடீர் எதிரிகள் அந்த வியாபர தலைவரை ஆட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எடுக்கின்ற முடிவுகளுக்கு அந்த வியாபார தலைவனின் உணர்ச்சிகள் (Emotion) மிக முக்கிய பங்கு வகிக்கிறது

நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல செக்ஸ் தரமான அன்பு சூழ் குடும்பம் இருந்தால் வியாபார தலைவன் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். மேற்சொன்ன பழைய சிலபஸில் இவையெல்லாம் இயல்பாகவே அமைந்து விடும்.

இப்பொழுது இருக்கின்ற பிஸ்னஸ் சூழல் அப்படி இருப்பது இல்லை! தொழில் தலைவர்களுக்கு பல்வேறு மனதிசை மாறுதல்கள் மன சமநிலை இல்லாமல் முடிவெடுக்க கூடிய சூழல்கள்
கையில் இருக்கின்ற பணத்தை என்ன சொல்லி எப்படி சொல்லி எடுத்துகொண்டு போவது என்று வியாபர தலைவரை சுற்றி இருக்கிறார்கள்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /தொழில் முனைவர்

9841665836
www.paranjothipandian.com

#Old #Syllabus #Industry #Office #business #family #home #life_system #sleep #food #sex_quality #loving_family #leader