பாண்டிசேரி-ரோமண்ட் ரோலண்ட் நூலகம் அருகில் சிறிய தங்கும் அறை வாடகைக்கு வேண்டும்!!

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய புத்தகங்களை கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் எழுதியும் தொகுத்தும் முடித்தேன். அதன் பிறகு கொரானா ஊரடங்கில் பின்வரும் நான்கு புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். ஜமீன் யாரு மிட்டா யாரு இனாம்தாரர் யாரு போன்ற பழைய நில நிர்வாக வரலாற்றை இந்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க

1)தமிழக நில நிர்வாக வரலாறு

2)பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரு புத்தகங்களையும் பழைய அளவு முறைகள் இன்றைய நில அளவு சிக்கல்கள் எல்லாம் சொல்ல

3)சர்வே பற்றிய கடிதங்கள் என்ற புத்தகமும் பழைய பத்திர வார்த்தைகளின் அர்ததங்களை

4)அந்தகால 3000 பத்திர சொற்களும் அதன் அர்த்தங்களும் என்ற புத்தகமும் எழுதி கொண்டு இருக்கிறேன். 

மேற்படி நான்கு புத்தகமும் ஐம்பது சதவீதம் முடிந்து விட்டது. இனி மீதி முடிக்க வேண்டும் அதில் எழுதப்படும் வரலாற்று உண்மைகளை உறுதி படுத்த பிற நூல்களை வாசித்து உண்மை தான் என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சமூகத்திற்கு அதிக உறுதியான தகவலை வழங்க வேண்டும். அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்! வாரத்தில் ஒரு நாளாவது ஒதுக்கும் பொழுது அடுத்த இரண்டு வருடங்களில் மேற்படி நான்கு புத்தகங்களை வெளியிட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.

நாம் முழுநேர எழுத்தாளர் அல்ல!! ஓடிகொண்டு இருக்கும் தொழில் முனைவர்! வியாபார அழுத்தங்கள் நிறைய உண்டு. எனவே எழுத்துக்கும் வாசிப்பிற்கும் தனி இடம் நல்ல புறசூழலில் வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாண்டிசேரி-ஒயிட் டவுனில் இருக்கும் ரோமன் ரோலண்ட் நூலகம், பிரெஞ்சு இன்ஸ்டியூட் நூலகம் ஆகிய இரண்டுக்கும் பதினைந்து நிமிட நடை பயணத்தில் சிறிய தங்கும் அறை (writing space ) வாடகைக்கோ லீசுக்கோ எதிர்பார்க்கிறேன்.

எழுத்தும் வாசிப்பும் ஒரு தவம் ! புற உலகை துண்டித்துக் கொண்டு அதில் மூழ்க வேண்டும். நட்புகள் பரிந்துரைக்க வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836/9962265834

#Romand #Roland #Rent #lease #paranjothi_pandian #writer #author #consulting #pondichery #reading #book #history #tamilnadu #survey #land #problem #issue #library #french #out_town #writing_space #recommend