பாராட்டியே தீரவேண்டும் மருங்காபுரி தாலுக்கா அலுவலகத்தை!
தமிழ்நாடு முழுக்க பல்வேறு தாலுக்கா அலுவலகங்களில் RTI மூலம் 2J யில் ஆவணங்களை தேடி கள ஆய்வு செய்து இருக்கிறேன்.ஆனால் மருங்காபுரி தாலுக்கா ஆவண காப்பறை போல் சீராக அடுக்கி தொகுத்து அடையாள குறியீடு இட்டு எங்குமே பார்த்தது இல்லை! சில பழைய தாலுக்காவில் வைப்பறையில் கோப்புகளின் மீதுதான் நடந்துதான் செல்ல வேண்டி இருக்கும்.சில தாலுக்காவில் ரேக்குகள் எல்லாம் உடைந்து குவிந்து கிடக்கும்.ஆனால் இந்த தாலுக்கா பள்ளிகூட நூலகம் போல்அனைத்து கோப்புகளும் ஒழுங்மைத்து வைத்து இருக்கிறார்கள்.மனதார மருங்காபுரி தாலுக்கா ஊழியர்களை பாராட்டுகிறேன்.