பிரசாத் அண்ணன் சிவகங்கை மன்னர் பள்ளிகூட வாத்தியார். சிவகங்கை ரியல் எஸ்டேட் களப்பணி செய்ய போனபொழுது. அவர் மன்னர் பள்ளிகூடத்தை சுற்றி காட்டினார். இந்த பள்ளி 1856 இல் சிவகங்கை ராஜா போத குரு ராஜாவால் ஆரம்ப பள்ளி ஆகி வல்லப உடைய ராஜாவால் 1881 இல் மேல்நிலை பள்ளி ஆகி அதன் பிறகு உயர்நிலை பள்ளி மற்றும் நர்சரி பள்ளி என்று 2500 பேர் படிக்கிற பள்ளியாக உருவாக்கி இருக்கிறது. தமழகத்தில் பல ஜமீன்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு திட்மிடுதல் இல்லாமல் வாழ்ந்து சொத்துகளை இழந்து தங்கள் பாரம்பரியம் மறந்து மக்களோடு மக்களாக மக்கள் கூட்டத்தில் கரைந்துவிட்டார்கள். ஆனால் சிவகங்கை சீமை 1730 இல் சேது சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து இன்றுவரை தனது Legacy ஐ பாராம்பரியத்தை முதல் மன்னர் சசி வர்ண தேவர் முதல் இன்றைய சிவகங்கை இராணி டி.எஸ்.கே. மதுராந்தக நாச்சியார் வரை தொடர்கிறது. என்பதை பெருமைபடவே சொல்லலாம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
Paranjothipandian.in
#paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மன்னர்_பள்ளி #mannar_school #போதகுருராஜா #jameen #ஜமீன் # Legacy #மன்னர்சசிவர்ணதேவர் #இராணிடிஎஸ்கேமதுராந்தகநாச்சியார்