பூமிதான போர்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளின் தகவல்கள் தரவேண்டிய விண்ணப்பம் குறித்த அறிவிப்பு :
பூமிதான போர்டுக்கு சொந்தமான இன்னும் பகிர்ந்து அளிக்கப்படாத நிலங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளின் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.
நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் முன்னெடுப்பாக, நிலத்தின் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் பால், இந்த மக்கள் பணியை துவங்குகிறோம்.
பூமிதான போர்டின் நிலங்களின் இருப்பு குறித்து பரஞ்ஜோதி பாண்டியனின் வீடியோக்கள்
https://youtube.com/playlist?list=PL_VLvgofCR5N6vhdoynx8YV89n3HEOap0
மேலே கண்ட யூடியுப் வீடியோக்களில் பரஞ்சோதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் நிலமற்ற விவசாய, ஆடு மாடுகள் வளர்க்கும் பணிகள் செய்யும் ஏழை எளிய மக்கள் பூமிதான போர்டு நிலங்களை பெற தகுதியானவர்கள். தான் நிலமற்ற ஏழை விவசாய பணி செய்யும் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் மற்றும் அதற்கான உறுதிமொழி பத்திரம் ஆகியவை மட்டுமே தேவையான ஆவணங்கள்.
பூமிதான போர்டின் நிலத்தின் பயன்களை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மக்கள் பணியாக, நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக நமது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூமிதான நிலங்களுக்கு அனுபவ உரிமை மட்டுமே கிடைக்கும். விவசாயம் செய்து வாழ்வாதாரம் ஏற்படுத்த நினைக்கும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டுகிறோம்.
அறக்கட்டளையின் சார்பாக பயனாளிகளின் தகவல்கள் தொகுக்கப்பட்டு, பூமிதான போர்டுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக செயல்பட்டு; உரிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு சென்றடைய சீரிய முயற்சிகளை எடுக்க உள்ளோம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம்.
பூமிதான போர்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளின் தகவல்கள் தரவேண்டிய விண்ணப்பம்
அறக்கட்டளை நிர்வாகம்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
9841665836
www.paranjothipandian.com
#bhumithanaboard #application #provide #beneficiaries