போலி ஆவணம் தயாரித்து நிலம்
விற்றுவிட்டார்கள் என்று கொட்டை
எழுத்தில் செய்தி போட்டு எங்களை போல
ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை சோத்துல கை வைக்கிறது நம்ம பத்திரிக்கைகாரங்க வேலையா போச்சு.

100 பேர் மக்கள் திரண்டு மனு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை விட திரட்ட பட்டு இருப்பார்கள் என்று உணர்கிறேன்.புன்செய தரிசை ந்த்தம் சிட்டா வைத்து பத்திரம் பதிவு செய்துவிட்டார்கள் என்று சொலவது நம்பும்படியாக இல்லை
அப்மடி செய்ய வாய்ப்பும் இல்லை.

என்ன நடந்து இருக்கும் என்றால் நில உச்சவரம்பிரம்பிலோ அல்லது வேறு சில காரணஙரகளுக்காக உபரி நிலங்களை அனாதீனம் ஆக்கப்ட்டு அவை நலிந்தபிரிவினருக்கு 2 ஏக்கர் 2 ஏக்கராக பிரித்து கலைஞர் பட்டா என்ற பெயரில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேலையை செய்ய அரசு உத்தரவு போட்டு இருக்கும்.ஆனால் பல ஆண்டுகளாக பயனாளிகளை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு நிலம் ஒப்படைக்கும் ஆவண வேலைகள் வரைபட பணிகளை அரசு எந்திரம் செய்யாமல் கும்பகர்ண தூக்கம் போட்டு இருக்கும்.மக்களும் இன்னக்கு நிலம் கிடைக்கும் நாளைக்கு நிலம் கிடைக்கும் என்று ஏங்கி இருப்பார்கள். அதே நேரத்தில் உச்சவரம்பிலோ அல்லது வேறு காரணங்களுக்கு கைவிட்டு போன நிலங்களை மீட்க ஏதாவது முயற்சி செய்து இருப்பார்கள்அதனால் பதறி போய் மக்கள் ஒன்று திரண்டு புகார் கொடுத்து இருப்பார்கள். பத்திரிக்கைகார்கள் சுவார்ஸயத்திற்காக போலி ஆவணங்கள் என்று செய்தி போட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு: இரண்டு ஏக்கர் நிலம் அங்கு இருக்கும் நலிந்த பிரிவினருக்கு கிடைக்க என்னால் சரியாக வழிகாட்ட முடியும்
இந்த கட்டுரை சமூக ஊடகங்களின் மூலம்
அவர்களுக்கு சென்றடைந்து தொடர்பு கொண்டால் உதவ தயாராய் இருக்கிறேன்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்

9841665836

தொடர்புக்கு :  9841665836 

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#போலி #ஆவணம் #நிலம் #ரியல்எஸ்டேட் #ஏஜெண்டு #நிலம் #ஒப்படை #உச்சவரம்பு #கலைஞர் #பட்டா #உபரி #புகார் #fake #document #realstate #agent #land #Assignment #ceiling #deed #kalaingar #அனாதீனம்