மரக்கால்! குறுக்கம்! கோட்டை!!நில அளவுகள் தெரியுமா?

திருநெல்வேலியில் தானிய விளைச்சலை வைத்துதான் நில அளவை அந்த காலத்தில் கணக்கிடபட்டன! “ஒரு கோட்டை” நெல் விளையும் இடத்தின் பரப்பளவு 163 செண்டு இருக்கும்! நிறைய நெல் வினையும் பூமியின் பரப்பும் அதன் வரப்பும் ஒரு கோட்டை நெல் விளைந்ததாததத்தான் இருந்தது.

இன்றும் ஆதியில் இருந்து பிரித்து விற்காமல் வைத்திருக்கின்ற குடியானவர்களின் நிலங்கள் சுமார் 163 செண்டாக இருக்கிறது,

முன்பின் ஒரு செண்டு இரண்டு செண்டு கூடுதல் குறைவாக இருப்பதை இன்றும் சர்வே செய்யும் பொழுது கண்கூடாக பார்க்கிறேன்.

மேலும் 8 செண்டு அல்லது 8 சீர்படி என்று சொல்லுவதை 1மரக்கால் என்று இன்றளவும் பேச்சுவழக்கில் இருக்கிறது. அதேபோல் குறுக்கம் என்றும் சொல்கிறார்கள். குறுக்கமும் 8 செண்டு என்றே பலர் புரிந்து
கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் குறுக்கம் புன்செய் நிலத்திற்கு தான் சொல்ல வேண்டும் நன்செய் நிலத்துக்கு மரக்கால் என்று சொல்லவேண்டும்.

மேலும் குறுக்கத்தை 8 செண்டு என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அது சுமார் 5.5 செண்டுதான் வரும்.புன்செய் நிலத்தில் இரண்டு மாடு கட்டி ஒரு நாள் முழுதும் உழுதால் 21 குறுக்கம் பரப்பளவு நிலம் முடிக்கலாம் என்று கணக்கிடுவார்கள்.

எனவே பழைய பத்திரங்களில் உள்ள மரக்கால், குறுக்கம் போன்றவை விஸ்தீரகணக்கில் மயக்கம் ஏற்படுத்தும் கவனமுடன் ஆவணங்களை பரிசோதியுங்கள்.

இப்படிக்கு
சா மு.பரஞ்சோதி பாண்டியன்
நூலாசிரியர் -நிலம் உங்கள் எதிர் காலம்
ஒருங்கிணைப்பாளர் -FAIRA புதுச்சேரி மாநிலம் 9841665836/9841665837
www.paranjothipandian.com
#Marakkal #Kurukkam #Fort #landsize