மேட்டூர் அணையும் கவர்னர் ஸ்டேன்லியும்!
தமிழகத்தின் நீதிகட்சி ஆட்சியில் உருவாக்கபட்ட நீர் பாசன வசதிகளில் மிகவும் முக்கியமானது. இந்த மேட்டூர் அணை! இதனை கட்டும் காலத்தில் தமிழகத்தின் கவர்னராக ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டானலி இருந்தார். இந்த கட்டுமானத்தில் அதிக கவனம் கவர்னர் செலுத்தி இருந்தார் சுமார் 9 வருட காலம் இந்த அணையை கட்டி முடித்து இருக்கிறார்கள்.
இன்று மேட்டுர் அணை என்று பெயர் மாற்றபட்டு இருக்கிறது. அன்று ஸ்டேனலி அணை என்று தான் அழைத்து இருக்கிறார்கள்!
சென்னையில் கைகால் முறிஞ்சால் உடனே ஸடேன்லி ஹாஸ்பிட்டல் போப்பா என்று ரிக்‌ஷாகாரர்கள் வாயில் கூட புழங்குகிற பெயர் தான் பழைய வண்ணார பேட்டையில் இருக்கின்ற ஸ்டானலி ஹாஸ்பிட்டல்!அந்த ஹாஸ்பிட்டலும் இந்த கவர்னர் காலத்தில் தான் உருவாக்கபட்டதால் அவர் பெயர் இட்டு இருக்கிறார்கள்
கொளத்தூரில் அனதீன நில சிக்கல், தங்கமாபுரிபட்டிணத்தில் நில ஆக்கரிமிப்பு சிக்கல்!மேச்சேரியில் ஒரு சைட் பார்த்தல் என்று ஒருங்கிணைத்து கொண்டு களபணிக்கு பயணிக்கும் பொழுது அப்படியே மேட்டூர் முழுமையும் அழகையும் உள்வாங்கி கொண்டேன்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834