வரன்முறைபடுத்துதல் மனு செய்தலை இறுதி கட்டத்தில் நிறைவு செய்தோம்!

DTCP வரன்முறைபடுத்துவதற்காக ஆன்லைனில் மனு செய்வதற்கு  29.02.2024 தேதிதான் இறுதிநாள் என்பதாலும் கடந்த ஆறு மாதங்களாக ஆன்லைனில் மனு செய்வதற்கு வாய்ப்பு இருந்தது.அதனை பயன்படுத்திகொள்ள சொல்லி ஆன்லைனிலும் நேரடியாகவும் எழுதியும் பேசியும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து கொண்டு இருந்தேன்

நிறைய அன்பர்கள் தங்களுடைய மனைக்கு வரன்முறைபடுத்தி கொடுக்க சொல்லி கொண்டு இருந்தார்கள்.அவற்றை எல்லாம் எனது குழுவினர்களே ஆன்லைனில் மனு செய்து கொண்டு இருந்தார்கள்

ஆனால் முன்பு கிராமமாக இருந்து தற்பொழுது பேரூராட்சி நகராட்சிக்கு மாறிய கிராமங்கள்,குரூப் வில்லேஜிற்குள் இருக்கும் கிராமங்கள்.ஒரே பெயரில் இருக்கும் கிராமங்கள்,HACA என்ற மலை கிராமங்கள்,போன்ற வற்றில் எல்லாம் ஆன் லைனில் மனு செய்ய கொஞ்சம் நுண்மான் நுழைபுலம் வேண்டும்.இப்படிப்பட்ட தனிமனைகள் 300ற்கும் மேற்பட்டது நிலுவையில் இருந்தது.

அதனை எல்லாம் கடந்த நான்கு நாட்களாக தென்காசியில் எனது குழு உறுப்பினர் மீனாட்சி அவர்களுடன் இரவு பகலாக அமர்ந்து நின்று நிதானமாக ஆன்லைனில் மனு செய்து Task ஐ முடித்தோம்.

 

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.in

 

#demarcation #privateland #தனிமனை #paperwork #ஆவணவேலை #guidelines #online #apply dtcp #requlation #dtcprequlation #layoutregistration #onlineregistrationcopy #HACA #task