வருவாய் துறை ஆவணங்களை இந்த தலைமுறைக்கு புரிகின்ற மக்கள் மொழிகளில் மாற்றுக!!!
அர்ஜி வந்து இருக்கிறது!! இசாப் கொண்டுவா!,கபூலெத்து போடு!! யாதாஸ்து எங்கே!!முச்சலிக்கை எங்கே? நமுனா வை எடு? ஜாபிதாவை காணோம்!
மேலே கண்ட இந்த வார்த்தைகள் எல்லாம்
இன்றளவும் செம்மொழியாம் தமிழ் மொழி ஆளும் மாநிலத்தில் நில நிர்வாகத்தில் பயன்படுத்தபடுகின்ற வார்த்தைகள்!!
இவைகலெல்லாம் பிமெமோ வில் ஒப்படை பட்டாவில் ஜப்தி நோட்டீசுகளில் ஏலங்களில் ஜமாபந்திகளில் இன்றளவும் எழுத்தறவில் புழங்குகின்ற வார்த்தைகள்
இப்பொழுது இருக்கிற எந்த அரசு அலுவலகர்க்கும் இந்த வாரத்தைகளுக்கு முழுமையாக அர்த்தம் தெரியாது.
சிலர் தங்களை மேதாவிலாசம் உடையவர்களாக காட்டி கொள்ள இந்த வார்த்தைகளை தங்கள் பத்திரங்களில் தங்கள் பேச்சுகளில் பயன்படுத்துகின்றன
இந்த தலைமுறைக்கு மக்கள் டிவி போன்ற செந்தமிழே தூரம்.அவர்கள் தங்கள் நிலம் வாங்க இவற்றை எல்லாம் ஆராய்ந்தால் இருக்கின்ற பாரசி உருது அரபி வார்த்தைகளை பார்த்துவிட்டு இது ஏதோ பெரிய விஷயம் என்று எடுத்து வைத்து விட்டு தூங்கி விடுவார்கள்.
இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கிறது தமிழ்வளர்ச்சி துறையும் நிலநிர்வாக துறையும் இந்த வார்த்தைகள் உள்ள ஆவணங்களை எல்லாம் மக்கள் மொழியில் மாற்ற வேண்டிய வேலைகளை செய்ய வேண்டுகிறேன்!
சார்!மேலே சொன்ன வார்த்தைகளிக்கு அர்த்தம் சொல்லுங்கள் என்று கேட்பது எனக்கு தெரிகிறது
அர்ஜி-மக்களின் மனுக்கள்(petition)
கபூலெத்து-எழுத்துபூர்வமான உடன்படிக்கை(written agreement)
யதாஸ்து- புரிந்துணரவு(memorandum)
முச்சலிக்கை-ஒப்பந்தம்(contract)
நமூனா-படிவம்(form)
ஜாபிதா-பட்டியல் (list,schedule)
இப்படி நிறைய வார்த்தைகளிக்கு அர்த்தம் வேண்டுமா!! என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாங்குங்கள்!! ஆதரவும் ஊக்கமும் படுத்துங்கள்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்,தொழில் முனைவர்
9962265834
குறிப்பு:அன்பு வாசகர்களே!! நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம் வேண்டுவோர்:9841665836
#அர்ஜி #மக்களின் மனுக்கள் #petition #கபூலெத்து #எழுத்துபூர்வமான உடன்படிக்கை #written agreement#யதாஸ்து #புரிந்துணரவு #memorandum #முச்சலிக்கை #ஒப்பந்தம் #contract #நமூனா #படிவம் #form #ஜாபிதா #பட்டியல் #list #schedule #ஜப்தி நோட்டீஸ் #japthi notice #ஜமாபந்தி #jamapanthi