F பட்டாவை தூய பட்டாவாக்க 20 ஆண்டுகால ஒரு வேள்வி
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகான செழிப்பான அடிவாரம் மத்வராயபுரம் சாடிவயல், போளுவபட்டி கிராமங்கள்! மத்வராயபுரத்தில் காருண்யா கல்லூரியும் போளுவபட்டியில் ஈஷா சமய நிறுவனமும் இங்கிருக்கிற இயற்கை அன்னையின் அழகின் சிரிப்பை கண்டுதான் இடங்களை தேர்ந்தெடுத்து தங்கள் நிறுவனங்களை ஸ்தாபித்து இருக்கிறார்கள் . மலைக்கு மேலே சுவையான குடிநீருக்க பெயர் போன சிறுவாணி அணை, கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா தலம் அமைந்துள்ளது.
எல்லா வயற்காடுகளிலும் மின் வேலிகள் காட்டுபன்றிகளை தடுக்க விவசாயிகள் போட்டு இருக்கிறார்கள். காணி நிலம் இருந்தால் விவசாயம் செய்து ஒரு குடும்பம் நல்வாழ்வு வாழலாம்! வானமும் பொய்க்காது பூமியும் பொய்க்காத மண்வளம்!
இங்கு ஒரு காலத்தில் ஒரு சில குடும்பங்களே அதிக அளவு நிலங்களை வைத்து இருந்தார்கள்! நில சீர்திருத்த துறை நில உச்சவரம்பு போட்டு நிலங்களை கையகபடுத்தி அங்கிருக்கும் நிலமற்ற நலிந்தோருக்கு நிலங்களை F பட்டா மூலம் வழங்கி இருக்கிறது. இப்படி வழங்கியது தவறு என்று நீதி மன்றத்தில் வரும் வழக்கு ஒன்று அங்கிருக்கின்ற சிலர் போட்டு 20 ஆண்டுகளாக இழுத்து இழுத்து அந்த F பட்டாவை அயன் பட்டா ஆகாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக F பட்டா பெற்ற மக்களுக்கு எதிராக சட்ட வன்முறையை பயன்படுத்துகிறார்கள்!அதில் இது ஒரு வகை! நிலமற்ற நலிந்தோருக்கு மறைமுகமாக பொருளாதார தடையை இங்கிருக்கும் நீதிமன்றம் மூலமாக விதிதித்து இருக்கிறார்கள்! காலதாமதம் ஒரு அநீதி! இந்நேரம் அயன்பட்டா கொடுத்து இருந்தால் கடன்வசதி பெற்று வீடு ,தொழில,கால்நடைபண்ணை என்று எதையாவது செய்து கொண்டு இருப்பார்கள்!
சரி நாம் அயன் பட்டா ஆக்க ஆக்கபூர்வமான வேலைகளை செய்வோம் என்று அங்கிருக்கும் மக்களிடம் தகவல்களையும் ஆவணங்களையும் பெற்று வேலைகளை செய்ய ஆரம்பித்து இருக்கின்றேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் 9841665836/9962265834 #patta #paranjothipandian #plots #realestate #realestateconsultant #realestateservices #realestatebooks #realestatecoach #Entrepreneur #author #property #propertylaw #cmda_plots #residential_plots #patta #chitta #plotsale #deed