சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள் அதுவும் முதல் தலைமுறையினரை சார்ந்த தொழில் முனைவர்களின் குடும்பத்திலோ, குடும்ப பாரம்பரியத்திலோ அவர்களை சுற்றியுள்ள வாழிடங்களிலோ தொழில் முனைவு தன்மை (Entrepreneurship)சிறிதும் இல்லாத வேலைக்கு போகும் (worker mentality)மக்களே அதிகமாக இருப்பார்கள்.
அவர்கள் தொழில் செய்பவர்களை அட்வைஸ் செய்தும் பரிகாசம் செய்தும் தோற்றவர்களை எடுத்து சொல்லியும் தொழில்முனைவு தன்மைக்கு எதிரான சிந்தனைகளையே விதைப்பார்கள் அப்படிபட்டவர்களின் புறச்சூழல் எதிர்மறை செல்வாக்கினை எல்லாம் தாண்டி ஒரு சிறு தொழிலை உருவாக்கி விஸ்தரிக்க அதிக அளவு நெஞ்சில் திராணியும் கடும் உழைப்பும் தேவைபடுகிறது.
அப்படி உழைத்து ஒரு தொழில் முன்னேறி வரும்போது அரசோ,அரசு இயந்திரமோ,வங்கியோ, கல்வி முறையோ என்று எதுவுமே பெரிதளவில் எங்களுக்கு துணையாக இருந்ததில்லை.
மேலும் தொழில் சூழல் 20 ஆண்டுகள் முன்னோக்கி முன்னேறி சென்றால் அரசு எந்திரம் அதனில் update ஆகாமல் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறது.
மேலும் காலவதி ஆன சிலபஸை அடிதட்டு மக்களிடையே இன்றுவரை விற்று கொண்டு இருக்கிறது SSI போன்ற அரசு எந்திரம்.இந்த தலைமுறை அடிதட்டு தொழில் முனைவரகளும் அதனை நம்பி படித்து பணத்தையும் நேரத்தையும் வீண்டிக்கின்றனர்.
எங்களுக்கு முன் கடந்த 50ஆண்டுகளாக தொழில் செய்த தொழில் முனைவர்கள் எல்லாம் அரசின் LICENCE சாம்ராஜ்ஜியத்தை ஊழல் முடை நாற்றமெடுத்த அரசியல் அதிகாரிகளின் மத்தியில் எங்கெல்லாம் வியாபார வாய்ப்புகள் கிடைகின்றதோ அதனையெல்லாம் பயன்படுத்துவதற்கு தங்களை முழு முதலாக அர்ப்பணித்து தொழிலை வளர்த்துள்ளனர்.
இன்றைய தலைமுறையினர் மேற்படி வெற்றிபெற்ற தொழில் முனைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கற்று, உணர்ந்து அவர்களைப்போல உருவாக வேண்டுமென்று PASSION உடன் இன்றைய முதல் தலைமுறை தொழில் முனைவர்கள் பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் தங்களுடைய குடும்பம், சின்ன சின்ன மகிழ்ச்சிகள் அனைத்தையும் மறந்து பசியடக்கி, காமம் அடக்கி, ஆசை அடைக்கி சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் தங்கள் வீட்டிற்கு சம்மபளம் போகவில்லையென்றாலும் தங்களுக்கு கீழே பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு சம்பளம் போட்டுவிடுகின்றனர்.
 
தொடர்புக்கு : 9841665836
 

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

https://www.amazon.in/dp/B07RNQTLD3