ஆரணி கல் சத்திரம் இன்று கடைகளாக
ஒருகாலத்தில் சத்திரங்கள் எல்லாம் பிரயாணிகளின் இளைப்பாறுதலுக்கும் போஜனத்தற்கும் பெரும்தனவந்தர்கள் கட்டளையாக கட்ட அதற்கு நிலங்களும் எழுதி வைத்தனர்.அந்த நிலத்தில் வருகின்ற பயன்களை வைத்து அதில் புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் இருந்தது .
தற்பொழுது அறநிலைய துறை அந்த கால சத்திரங்களை(கோவில்களை அல்ல)கூட தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனை வணிக வாடகைக்கு விட்டு பொருளீட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிவிட்டது.
களபணிக்கு ஆரணி செல்லும் பொழுது நான் கண்ட கல்சத்திரம் கடைகளாக இருப்பதை பார்த்து அறநிலைய துறையை அறம் செய்யப்பா என்று நினைத்துகொண்டே வண்டி ஓட்டினேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836