கல்லும் கள்ளியும் கிராம எல்லைகள்!!!
ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொருவிதமாக சர்வே செய்து பிரித்து இருப்பார்கள். சில கிராமங்களில் வரிசையாக முள்ளும் கள்ளியும் நின்று கிராம எல்லைகளை பிரிக்கும். சில கிராமங்களில் வெறும் தியோடலைட் சர்வே கற்கள் மட்டுமே சுமார் நானுறு மீட்டர் இடைவெளியில் நடபட்டு கிராமங்களை பிரித்து இருக்கும். ஆறு, நீரோடை போன்றவற்றாலும் கிராம எல்லைகளை தனிதனியாக காட்டி இருப்பார்கள். அதேபோல் கருங்கற்கள் நிறைய இருக்கின்ற பகுதிகளில் கருங்கற்களாலேயே கிராம எல்லையை பிரித்து காண்பித்து இருப்பார்கள். செஞ்சி தாலுகாவில் ஒரு சர்வே சிக்கல் களபணிக்கு சென்றபொழுது அங்கு நிறைய பாறைகள் கிடைப்பதால் கிராமங்களின் எல்லையை பாறை கற்களாலாயே பிரித்து அழகாக காட்டியிருக்கிறார்கள்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836
#paranjothipandian #writer #field #author #training #consulting #problem #solve #issue #surve #plot #village #stone #villagemap #senji #rock