விழுப்புரம் தாண்டி பரிக்கலுக்கு களபணிக்காக பைக்கில் போகையில் On the way விழுப்பும் பேருந்து முனையத்தில் ஒரு மணி நேரம் நத்தம் பட்டா சிக்கல் சம்மந்மாக வழிகாட்டுதல் வழங்கினேன்.பெரியவர் சிதம்பரத்தில் இருந்து வந்து இருந்தார்.பல வருஷ நிலுவை வேலை உங்கள் யூடியூபை பார்த்ததும் நத்தம் பற்றி தெளிவு கிடைத்து பட்டா வாங்க வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.நீங்கள் மாதந்தோறும் தமிழம் முழுவதும் உள்ள சிறிய டவுனுக்கு வந்தால் நாட்டுபுறத்தனாகிய எங்களை போன்றோருக்கு புண்ணிமாக இருக்கும் என்றார்.மெட்ராஸ்லேயே இருந்திடாதீங்க!! சரியான தகவல் தெரியாம மண்டைய உடைச்சிகிட்டு இருக்கோம் எங்களை போன்ற பலர் என்று சொன்னார்!!
நானும் முடிந்த அளவுக்கு சிறிய டவுனுக்கு களபணி வேலை எடுத்துகொண்டு நிலம் சம்மந்தபட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Villupuram #field_work #guidance #Natham #nathamissue #issue #Chidambaram #YouTube #Madras #awareness #camp #landrelated #landproblem #landissue