இன்று (23-8-2024) வெள்ளிக்கிழமை அன்று ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் M.E. பிரகாஷ் அவர்களை சந்தித்து இனாம் நில பிரச்சனை குறித்து எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கவனமாய் கேட்டு அறிந்ததோடு மட்டுமல்லாமல், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அறநிலையத்துறையின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் கர்நாடகா ஆந்திரா மாநிலம் போல நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஆவண செய்திடவும் உறுதியளித்துள்ளார்.

நிகழ்வை ஏற்பாடு செய்த குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் அவர்களுக்கும் சடையபாளையம் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரன் அவர்களுக்கும் பெல்லம்பட்டி கவுன்சிலர் விஸ்வநாதன் அவர்களுக்கும், மேலும் இந்நிகழ்வு பயனுள்ளதாக அமைந்திட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கனம்,
இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கம்