“’நீரி’ன்றி அமையாது உலகு “ என்பது பொருள் பொதிந்த முதுமொழி. பூகோள ரீதியாகப் பார்த்தால், நிலம்தான் உலகமே. நீர்நிலைகள் அமையவும் நிலமே அடிப்படைத் தேவையான ஒன்று என்பதன்றோ உண்மை! அடிப்படைத் தேவைகள் என்றால் – மனிதர்களுக்கு உண்ண உணவு, மானங்காத்திட உடுக்க உடை, அடுத்ததாக இருக்க இடம் இவைதாம்.எனவே ‘நிலமின்றி அமையாது உலகு’ என்ற புதுமொழி உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது. நிலம் என்றால் உணவுப் பயிர்களைப் பயிரிடும் இடம் என்பதைத்தாண்டி, கிராமங்களைவிட்டுக் குடிபெயர்ந்து, புதுவீடுகட்ட மனை வாங்கிட மக்கள் விரும்பத் துவங்கிய கால கட்டத்தில்தான் நகர்ப்புறங்களில் மனைப்பிரிவுகள் உருவாகத் துவங்கியிருக்கவேண்டும்.
அதுவே படிப்படியாக வளர்ந்து, நகர்ப்புறங்களில் மனைகளை வாங்குவது நல்ல முதலீடு என்ற ஒரு நிலை ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது எனலாம்.“’நீரி’ன்றி அமையாது உலகு “ என்பது பொருள் பொதிந்த முதுமொழி. பூகோள ரீதியாகப் பார்த்தால், நிலம்தான் உலகமே. நீர்நிலைகள் அமையவும் நிலமே அடிப்படைத் தேவையான ஒன்று என்பதன்றோ உண்மை!அடிப்படைத் தேவைகள் என்றால் – மனிதர்களுக்கு உண்ண உணவு, மானங்காத்திட உடுக்க உடை, அடுத்ததாக இருக்க இடம் இவைதாம்.எனவே ‘நிலமின்றி அமையாது உலகு’ என்ற புதுமொழி உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது. நிலம் என்றால் உணவுப் பயிர்களைப் பயிரிடும் இடம் என்பதைத்தாண்டி, கிராமங்களைவிட்டுக் குடிபெயர்ந்து, புதுவீடுகட்ட மனை வாங்கிட மக்கள் விரும்பத் துவங்கிய கால கட்டத்தில்தான் நகர்ப்புறங்களில் மனைப்பிரிவுகள் உருவாகத் துவங்கியிருக்கவேண்டும். அதுவே படிப்படியாக வளர்ந்து, நகர்ப்புறங்களில் மனைகளை வாங்குவது நல்ல முதலீடு என்ற ஒரு நிலை ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது எனலாம். ஒரு தனி நபர் 30 ஆண்டுகளாக அரசாங்கத்திலோ அல்லது தனியார் துறை நிறுவனத்திலோ பணியாற்றி மிகுந்த சிரமத்திற்கிடையே ஈட்டும் பணத்தைவிட மனையில் சில ஆயிரங்களை முதலீடு செய்பவர்கள் அதே 30 ஆண்டுகளில் எந்த உழைப்புமின்றி அதிகப் பணம் ஈட்டிவிட முடிகிறதென்பது முரண்பாடாக இருந்தபோதும் – நிதர்சனமான உண்மைதான். நிலத்தில் முதலீடு என்பது வழக்கமான, இயல்பான ஏறக்குறைய அவசியமான ஒன்றாகிவிட்டபின்பு, அதனை எங்கே, எப்படி, எப்பொழுது, சிக்கல்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் செய்யலாம் என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிவிடுகிறது.
மனைப்பிரிவின்முதல் நிலை விற்பனைபெரும்பாலும் செய்தித்தாள் விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரம், செய்தித்தாள்களின் இடையே செருகி அனுப்பப்படும் சில துண்டு விளம்பரங்கள், சுவரொட்டிகள், நண்பர்கள் என்று பலவிதமாகவும் மக்களைச்சென்றடைந்துவிடுகின்றது. ஆனால் மறுவிற்பனை என்று வரும்பொழுதோ, பெரும்பாலும் இடைத்தரகர்கள் மூலமாகவோ, அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமாகவேதான் நடைபெறுகின்றது. ஏறக்குறைய அவை தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. நூலாசிரியர் திரு. சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் சென்னையில் 1980ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயது முதலே திரு. ஈ.வெ.ரா. அவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில், “தொண்டு செய்த பழுத்த பழம்” என்ற பெயரில் கவிமாலை வெளியிட்டதற்காகத் திரு. வீரமணி அவர்களிடமிருந்து ரூ. 1000/- பரிசு மற்றும் பாராட்டுகளும் பெற்றதாகவும், 11ஆம் வகுப்புப் படிக்கையில், “புரட்சிக்கவி விதைகள்” என்ற நூலை வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார். ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி அவர்களின் ‘தாய்’ காவியம் படித்தபின்னர் அதன் கதாநாயகன் ‘பாவெல்’ஆக உருவகப் படுத்திக்கொண்டதாகவும் பெருமையுடன் கூறுகிறார். ‘வளர் தொழில்” பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
“PARANJOTHI PANDIAN” என்ற பெயரில் “YOU TUBE” சேனல் ஒன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார். இவரது தந்தையின், ‘ பொன்னியின் செல்வன்’ நூல் மீதான ஆர்வம் காரணமாகவே தனக்குப் ‘பரஞ்சோதி’ என்று பெயரிடப்பட்டதாகக் கூறுகிறார். எளிமையாக உடையணியும் இவர் “MINIMALIST PHILOSOPHY” என்ற குறைந்தபட்ச தேவை நிவர்த்தி போதுமானதென்ற கொள்கை கொண்டவராகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.
தொட்டியில் பதிந்து, உரமிட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்யும் விதையின் செடியைவிட, வீசி எறியப்பட்டு, விதையாக பூமியில் புதைந்து, தானே இயற்கையாய் வேர்விட்டு வளரும் செடியே செழிப்பாக வளரும். எவரேனும் சைக்கிளில் உட்காரவைத்து, கேரியரைப் பிடித்துக்கொண்டு, லேசாகத்தள்ளியபடி, “நேராகப் பார், இடுப்பை வளைக்காதே, பெடலைமிதி…” என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து கற்றுக்கொள்பவர்களைவிட; தானே சைக்கிளைத் துடைத்து, தானே தள்ளிச் சென்று காற்றடித்து, முதலில் உந்தி, பின்பு குரங்குப்பெடல் போட்டு, பார் மீது அமர்ந்து ஓட்டி, பின்னர் சீட்டில் அமர்ந்து ஓட்டத்துவங்கி, ஒருகையை விட்டு ஓட்டி, இறுதியாக இரண்டு கைகளையும் விட்டுவிட்டு ஸ்டைலாக ஓட்டுபவர்கள்தான் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் திறமைசாலிகள். திரு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களும் அவர்களைப் போன்றவர்தான். இவரின் இருபத்து இரண்டாம் வயதில், ஏறக்குறைய கிழக்குக் கடற்கரைச் சாலை உருவாகத்தொடங்கிய காலத்தில் இவரது இடைத் தரகர் வாழ்க்கையும் துவங்கியதாகவும், மேடவாக்கத்திலுள்ள’கவிதா காபிக்கடை’ மற்றும் ‘சீவரம்’ பகுதியிலுள்ள ‘மணி டீக்கடை’ இவையே இவர் ரியல் எஸ்டேட் துறையில் வேரூன்றுவதற்கான விதை ஊன்றப்பட்ட ‘சந்திப்பு முனையங்கள்’ என்று நினைவுகூர்கிறார்.
ஓரளவு வளர்ந்தபின், ‘பெரியார் ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் சிறு நிறுவனம் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, சுய அனுபவமும் சேர்ந்துகொள்ள, “PRAPTHAM REALTORSஎன்ற “PRIVATE LIMITED” நிறுவனம் உருவாகி, தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் சில வெளிமாநிலங்களிலும், வேரூன்றி வருவது இவரின் வெற்றி. இதன் மூலம் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் என இவர் பல தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கிவருவதுடன் ரியல் எஸ்டேட் பற்றிய பயிற்சி வகுப்புகளும் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. இவர் பாரதமுன்னாள் ஜனாதிபதி, மேதகு பிரதிபா பாட்டில் அவர்களிடம் “GLOBAL INDIAN – 2014”விருது பெற்றதுமுத்தாய்ப்பான செய்தி.இப்படிப் பரந்துபட்ட அனுபவம் கொண்ட இவர், பலமுறை விழுந்து, ஒவ்வொரு முறையும் எழுந்து, விழுப்புண்களுடன் கற்றுக்கொண்டவற்றை நூல் வடிவில் கொணர விரும்பியதைப் பாராட்டியே தீரவேண்டும். ஏனெனில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என்று பார்த்தால் ஏராளமான நூல்கள் காணக்கிடைக்கும்.ஆனால் ‘ரியல் எஸ்டேட்’ குறித்த நூல்களையோ தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். முதலில் “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற நூலின் தலைப்பினைப் பாராட்டவேண்டும். ஏனெனில் பொதுவாக எதிர்காலம் என்றால்,ஒருவர் சேர்த்துவைக்கும் சொத்தையே குறிப்பிடும் மனோபாவம் உள்ளது. அதிலும் சொத்து என்னும்பொழுது பணம், நகை, மற்ற எல்லாவற்றையும்விட நிலத்திற்கே முக்கியத்துவம் அதிகம் தரப்படுகிறது. அவ்வகையில் மிகப்பொருத்தமான தலைப்புதான்.
அடுத்தபடியாக தலைப்பின் “ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்” என்ற அப்பட்டமான அடிக்குறிப்பு தான் என்றும் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் என்பதைச் சொல்லிக்கொள்வதில் அவருக்கு எந்தவிதத்தயக்கமும் இருக்கவில்லை (பிராப்தம் ரியல்டர்ஸ் என்ற லிமிடெட் நிறுவனமாகத் துவங்கிய பின்னும், )என்பதைப் பறைசாற்றுகிறது. “YOUR DRESS STARTS TO SPEAK, BEFORE YOU DO” அது போலவே புத்தகத்தின் அட்டை முகப்பினை அமைத்துள்ளார். “நிலத்தின் பயன்கள் அனைவரையும் அடையச் செய்வதே தனது முக்கிய நோக்கம்” என்று முகப்பு அட்டையிலேயே கோடிட்டுக் காட்டுகிறார். சி(ப)லர் முதலீடு என்ற பெயரில் சரிவர ஆராயாமல் அவசரப்பட்டுப் பணத்தைப் போட்டு மாட்டிக் கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தினை, “பார்த்துப் பார்த்துச் சம்பாதிப்பதைப் பார்க்காமலேயே ரியல் எஸ்டேட்டில் போட்டு வீணடிக்கின்றனர்” என்ற பின்னட்டைக் குறிப்பின் மூலமும், சொத்து / நிலம் வாங்கும் நேரத்தில் எப்படி அணுகவேண்டும் என்பதைச் “சொத்து விஷயம் என்றுவரும்போது, உணர்வுகள், உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள்” என்ற பின்னட்டைக் குறிப்பின் மூலம் அறிவுறுத்தலாகவும் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில் முகப்பு அட்டை துவங்கி, பின் அட்டை, காகிதத் தரம், அச்சு நேர்த்தி, என அனைத்தும் ஒரு வெளிநாட்டுப் பதிப்பாளரின் தரத்திற்கு இந்த நூல் ஒத்திருக்கிறது..
குழந்தைப் பருவம் துவங்கி பதின்ம வயதுவரையிலான காலத்தில் நமக்கு ஆசானாக, வழிகாட்டியாக இருப்போரின் ஆளுமைத்தன்மையே பெரும்பாலும் நம்மை உருவாக்கும். அவ்வகையிலேயே திரு. பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் மனங்கவர்ந்த சென்னை சாந்தோம் பள்ளியின் அன்றைய முதல்வராக இருந்து பள்ளியின் வளர்ச்சியில் பங்காற்றி, பணி ஓய்வுக்குப்பின், சேலம் அயோத்யாப்பட்டினம் அருகாமையில் மலைக்காடுகளின் நடுவே, புனித மான்ட்ஃபோர்டு சமுதாயப் பள்ளி (மலைவாழ் மக்களுக்கான சிறப்புப் பள்ளி) உருவாக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ்ப் பழங்குடியின மாணவமாணவியரின் வளர்ச்சிக்கு இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.K.J. ஜார்ஜ் அவர்களுக்கு இந்த நூலை அர்ப்பணித்து கெளரவிக்கிறார். மேலும் நூல் விற்பனை மூலமாகக் கிடைக்கும் தொகையில் ஏறக்குறைய 10% (ரூ. 50-00) பெருமையுடன் அந்தப் பள்ளிக்கு நன்கொடையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது 15 ஆண்டுகால கள அனுபவத்தினை நிலம் வாங்க, விற்க மற்றும் முதலீடு செய்பவர்களுக்கும் பயன்படும் வகையிலேயே, ‘நிலம் உங்கள் எதிர்காலம்’ என்று நூல் வடிவில் கொண்டுவருவதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
பெரும்பாலானோர் தமது பரந்துபட்ட அனுபவத்தை மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்; கேட்டாலும் சொல்லித்தரமாட்டார்கள். சிலர் ஏதோ கொஞ்சம் மட்டும் சொல்லித்தருவார்கள்.அப்படிப்பார்க்கையில், பெரிய அளவில் பணம் எதுவும் புத்தக வெளியீட்டில் கிடைத்துவிடாது என்றபோதும் தனது நெடிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வந்திருப்பது பாராட்டிற்குரிய விஷயமாகவே எண்ணத்தோன்றுகிறது. 341 பக்கங்களுடன், நல்ல தரமான காகிதத்தில் தரமான அச்சுடன், வயது மூத்தவர்களும் எளிதாய் படிக்கக்கூடியவகையில், பெரிய எழுத்துகளுடன், எளியநடையிலும் எழுதப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு நாவலைப்படிப்பதுபோல் இத்தகைய தலைப்பிலான புத்தகத்தை படிக்கத் தோன்றாது என்பதால், புத்தகத்தை 4 தொகுதிகளாகப் பிரித்து, பொருத்தமான தலைப்புகள் கொண்ட பொருளடக்கத்துடன் நாம் அறிய விரும்பும் செய்தி நூலில் எங்குள்ளது என்பதை எளிமையாக கண்டுகொள்ளும் விதத்தில் கொடுத்துள்ளது கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும், அதனுடைய சாராம்சத்தை இரத்தினச் சுருக்கமாக கட்டங்கட்டித் தந்திருப்பது – முத்தாய்ப்பு.
இந்த அரிய நூலில் திரு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் வழங்கியுள்ள தலைப்புகளும், விபரங்களும் ஏறக்குறைய முழுமையானது என்றால் – மிகையில்லை. புத்தகத்தின் அளவு கருதி, நூலுடன் இணைக்க விரும்பிய ஏராளமான ஆவணங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், www.parapthamrealtors.com என்ற வலைத்தளத்திலும், www.paranjothipandian.com என்ற வலைப்பூவிலும் கொடுத்துள்ளார். இதற்கும் மேலாக நூலை வாசிக்கும் எவருக்கேனும் சந்தேகங்கள் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்ள 9841665836 என்ற செல்பேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பயின்ற பள்ளியின் முதல்வர் திரு. கே.ஜி. ஜார்ஜ் துவங்கி, வளர்தொழில் பத்திரிகை ஆசிரியர் திரு.க. ஜெயகிருஷ்ணன் அவர்கள்வரை நூற்றுக்கும் மேலான, தனது வளர்ச்சிக்குப் பல்வேறுகாலகட்டங்களிலும் உதவிய மனிதர்களை, பரந்தமனத்துடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். ‘வளர் தொழில்’ ஆசிரியர் திரு.க. ஜெயகிருஷ்ணன் அவர்கள் தனது சஞ்சிகையில் வாய்ப்பளித்ததோடு கட்டுரை தாண்டி, இந்த நூல் எழுதியதற்காகவும், தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளதற்காகவும், மனந்திறந்து பாராட்டியுள்ளார்.
செய்யாறு – சுலைமான் ரியல் எஸ்டேட் நிறுவனர் Dr. A. பெரோஸ்கான் மாலிக் அவர்களோ, தனது வாழ்த்துரையில் திரு. பரஞ்ஜோதி பாண்டியன் அவர்களை ‘மக்கள் ரியல்டர்” என்று பாராட்டியுள்ளார். திருநெல்வேலி – ஜெனிசன் லேன்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனர் டாக்டர். சி. சங்கர் அவர்கள், திரு. பரஞ்ஜோதி பாண்டியன் அவர்களின் அனுபவம், தொழில் மீதான பற்று மற்றும் ஆர்வம் ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், “கூர்சீட்டு, நாரசந்து போன்ற பல விஷயங்களை இவரின் எழுத்துக்கள் மூலமாகப் புதிய பரிமாணத்தில் நானே உணர்ந்து இருக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
இந்த அரிய நூலில் திரு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் வழங்கியுள்ள தலைப்புகளும், விவரங்களும் ஏறக்குறைய முழுமையானது என்றால் அது மிகையில்லை.
மூன்றுவிதமான வில்லங்கச் சான்றிதழ்கள், அரசு வழிகாட்டி மதிப்பு பற்றி அறியவேண்டிய செய்திகள், பவர் ஆஃப் அட்டார்னி, உயில் சொத்து, பிழைதிருத்தப் பத்திரம், பாகப்பிரிவினை, மைனர் சொத்து, விடுதலைப் பத்திரம், எட்டு விதமான பட்டாக்கள், ஜமாபந்தி, யாருக்கு எல்லாம் சொத்தில் உரிமையில்லை, போலிப் பத்திரங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது, பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்யவேண்டும், ஜப்தி சொத்துபற்றி தெரியவேண்டிய செய்திகள், பஞ்சமி நிலம் குறித்து அறியவேண்டியவை…, இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி எழுதியுள்ளார்.
சில சரிபார்க்கும் பட்டியல்கள், சில மாதிரி மனுக்கள், சில கடித நகல்கள், நாளிதழ் செய்தி நகல்கள் இவையும் இணைத்துள்ளார். ஏறக்குறைய ஒரு சிறிய ‘REAL ESTATE ENCYLOPEDIA’ போல இதனைத் தந்துள்ளார்.‘BLACK IS BEAUTY’ என்பதுபோல கறுப்பு நிற பின்னணியில், தங்கநிற எழுத்துகளிலான தலைப்புடன், தமக்கே உரிய வெள்ளைப் புன்னகையுடன், நிலம் வாங்கும் முன்பு இதனை வாங்கிப் படித்தால் பல(ன்)ம் என்று சொல்லாமல் சொல்கிறார். வாங்கிப் பார்க்கலாம்;. படித்துப் பயனுள்ள செய்திகளை உறவுகள் மற்றும் நட்புகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.எளிமை, உழைப்பு, பாசாங்குகளில்லாத பழகும் தன்மை, மற்றும் பன்முகத் திறமைகள் கொண்ட அருமை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் மென்மேலும் வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகள்.
நன்றி!
வணக்கம்!!
ஜெய்ஹிந்த்!!!
அன்புடன்,ரவிஜி
@மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
வலைப்பூ: www.mayavarathanmgr.blogspot.in
செல்பேசி: 9841665836