Skip to content
Read Moreஒரு கொலை வழக்கில் மூன்று எதிரிகள் கூட்டாக ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தன்னிடம் கொடுத்ததாகக் கிராம நிர்வாக அலுவலர் அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? சூழ்நிலைச் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வழக்கில் ஒரு நபரின் இறப்பு வேறு விதமாகவும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிற நிலையில், அந்த வழக்கு எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?
Read Moreஒரு குற்றவழக்கில், முதல் தகவல் அறிக்கை அந்தச் சம்பவம் நடைபெற்று ஏழுநாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்தக் குற்றவியல் நடவடிக்கை இரத்துச் செய்யுமாறு எதிரிகள் கோரமுடியுமா? காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கையானது எதிரிகள் மீதுள்ள குற்றச்சாட்டினை மெய்ப்பிக்கும் விதமாக அமையவில்லை என்று குறிப்பிட்டு, எதிரிகள் தங்கள் மீதுள்ள வழக்கை இரத்துச் செய்யுமாறு கோரமுடியுமா?
Read Moreகாவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிடப்பட்ட நகல்களைத் தனக்கு வழங்குமாறு நிகழ் நிலைப்புகழ்தாரரால் (Deject Complainant) தாக்கல் செய்யப்பட்ட நகல் கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரணை ஏற்க மறுத்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றா?
Read Moreஒரு இடத்தில் உருவான கூட்டுச் சதியின் அடிப்படையில், பல இடங்களில் குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பல இடங்களில் நடைபெற்ற அந்தக் குற்றச் சம்பவங்களை ஒன்று சேர்த்து, கூட்டுச் சதி உருவான இடத்தின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறு அரசுத் தரப்பு கோர முடியுமா?
Read Moreஇழப்பீடு கோருபவர் எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யாத போது, போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த வழக்கிலுள்ள சாட்சியங்களை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.11,52,648/ -யை ரூ.20,15,000/- ஆக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Read Moreவாகன விபத்தில் இறந்து போனவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு (M.B.B.S.) படித்து வருகிற நிலையில், அவருடைய மாத வருமானத்தை ரூ.10,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது ஏற்புடைய ஒன்றா? விபத்தில் இறந்து போனவரின் பெற்றோர் வயதை அடிப்படையாகக் கொண்டு, பெருக்கல் அட்டவணையைத் தேர்ந்தெடுத்து, தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டுள்ளது முறையான ஒன்றா?
Read Moreஇருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்த போது, அந்த இருசக்கர வாகனம் வேறொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணித்துள்ளதால், அந்த விபத்திற்கு அவர்களும் காரணம் என்று குறிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகையின் அளவைக் குறைக்க முடியுமா?
Read Moreநிலத்தின் கோயில் புறம்போக்கு மீது அரசிற்குள்ள அதிகாரம் என்ன? கோயில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித் துள்ளவர்களுக்கு அரசுப் ப பட்டா வழங்க முடியுமா? அந்தக் கோயில் புறம்போக்கு நிலங்களைக் கோயில் நிர்வாகம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
Read Moreகுடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் வாழ்க்கைப் பொருளுதவித்தொகையை மாதந்தோறும் பெற்று வருகிற மனைவி தனக்கு இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவித்தொகையை வழங்கக் கணவருக்கு உத்தரவிடுமாறு இந்துத் திருமணச் சட்டம் பிரிவு 24-இன் கீழ் கோரமுடியுமா? மனைவிக்கு கல்வியறிவு உள்ளதால், வருவாய் ஈட்டித் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும் திறன் பெற்றவர் என்கிற காரணத்தினால், வாழ்க்கைப் பொருளுதவித்தொகையை வழங்கக் கணவர் மறுக்க முடியுமா ?